பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நமசிவாய முதலியார் 67

மிக உயர்ந்த நிலையிலிருந்திருக்க வேண்டும் என்றாகும். ஆகவே, அதுவும் பொருந்தாக் கூற்றாக முடியும்.

இனி, வாதாபி வில்லவன் கதையை எடுத்துக் கொள்வோம். வாதாபி ஆடாக, வில்வலன் அவனைக் கொன்று, வந்த விருந்தினருக்கு இடுவதாம். விருந்தினர் உண்டு களையாறும் சமயம் வில்லவன் வாதாபியை யழைக்க, அவன் விருந்தினர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவதாம். இவ்விதமாக நடக்குமா வென்பதை அறிஞரே யோசிக்க வேண்டும்.

மூன்றாவது பொதியமலைக்கதை. இக்கதையைப் பற்றித் தமிழ் நூலிலே வருகிறதென்ன வென்று பார்ப்போம். -

சங்கநூலை எடுத்துக்கொள்வோம். சங்கம் என்ற சொல்லே தமிழ்ச்சொல்லல்ல. சகரம் அ, ஐ, ஒள என்ற எழுத்துக்களோடு முதலில் வராது என்பது இலக்கணம். அவ்வாறு வரவேண்டுமானால் சகரம் போய்விடும். சபை என்பது அவை யென்று வருகிறதைக் கவனிக்க.

இனி அகத்தியர் முதற் சங்கமிருந்த காலம் 4440 யாண்டு. இடைச்சங்கமிருந்த காலம் 3700; ஆக 8140 யாண்டு ஆகிறது. அதன்பின் இரண்டாயிரம் ஆண்டு சென்றிருக்கின்றன. எண்ணயிரம் ஆண்டு இருந்த அகஸ்தியர் இன்னுமொரு இரண்டாயிரமாண்டு இருந்தாரானால் யூனிவர்சிட்டி சரித்திர ரீடரான நமக்கு முன்னிருக்கும் திரு. பி.டி. சீனிவாச ஐயங்காரவர்கள் அகத்தியரை நேரே கேட்டு எல்லாவற்றையும் எழுதிவிடுவார். ஆனால் அகத்தியர் இன்னுமிருக்கின்றார் என்று சொல்லி அதனை முற்றும் நம்பும் ஜனங்களும் உண்டு (கரகோஷம்). இன்னும் இதுபோலப் பலவுண்டு.

மு. ராகவையங்காரவர்களைப் பார்த்து, சங்கம் என்பது எப்படி வந்த தென இவர்கள்தான் சொல்ல வேண்டுமென்று சொல்ல, தொகை யென்று பெயரிருக்கலாமென்றும் அது 'மதுரைத் தொகையாக்கினானும் என்ற தேவாரத்தில் வருவதாகவும் சொல்ல, அது அந்தப் பொருளில் வந்ததாக வேறு, உதாரணங்கள் இல்லையென்றும் கூறினார்கள். அதனிலும் அகத்தியர் பேர் காணப்படவில்லை. இறையனார் களவியலில் தான் முதன் முதலாக வருகிறது.

அகத்தியர் புலத்தியரிடம் சென்று, உலோபா முத்திரையைப் பெற்று அவளை அங்கேயே வைத்துவிட்டுச் சமதக்கினியிடம் சென்று திரண தூமாக்கினியைப் பெற்று அழைத்துக்கொண்டு, கங்கையிடம் சென்று காவிரியைப் பெற்றுத் தென்னாடு சென்றாராம்.