பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வெள்ளையாம்பட்டு சுந்தரம்

5


பதிப்புரை


மனிதகுலம் பண்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சிக் குரியதாகவே நீடித்து வருகிறது. நமது நாட்டுக்கு அறிவுறுத்தலும் வழிநடத்தலும் மிக மிகத் தேவைப்படுகிறது.

ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு என்கிறார்கள். சான்றோர்கள் தோன்றிய புண்ணிய பூமி என்கிறார்கள். ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இங்கே என்ன புதுமைகள், நன்மைகள் தோன்றியுள்ளன? என்ன பயன்கள் உருவாகி யிருக்கின்றன?

மதங்கள், சமயங்கள் பல தோன்றியுள்ளன. அவற்றால் வேற்றுமைகளும், பகைமையும் உருவானதே உண்மைநிலை.

புண்ணிய பூமியின் வரலாறு மனம் பூரிக்கும் வகையிலா அமைந்திருக்கிறது?

இங்கு வெளிநாட்டோர் தொடர்ந்து வந்து வந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். எண்ணற்ற கோயில்களை இடித்து அழித்துள்ளனர். பல கொடுமைகள் நிகழலாயின. கோயிலில் இருந்தவாறு பூசையும் படையலும் திருவிழாப் பெருமைகளும் பெற்றுவந்த தெய்வங்கள் நமக்குச் செய்ததென்ன? தீமைகளைத் தடுத்தனவா? கொடியோரைத் தண்டித்தனவா? பக்தி செய்த அப்பாவி மக்களை அடைக்கலம் தந்து காப்பாற்றிய துண்டா? கோயில் கட்டிய மன்னர்கள் நிம்மதியாய் வாழ்ந்ததுண்டா? அவர்களது மக்கட் செல்வங்கள் பெருமையோடு வாழ்ந்ததுண்டா? கும்பிட்ட குடிமக்களாவது குறையின்றி வாழ்ந்தார்களா?

வாணிகம் செய்ய வந்தவ ரெல்லாரும் இங்கே இருந்த பக்தர்களான மக்களை ஏமாற்றினர் எதிர்த்தபோது அழித்தனர் பணிய வைத்தனர். இந்தியர் அனைவரும் அந்நியருக்கு அடிமைப்பட்டனர். அதைத் தடுக்க வில்லையே! பகைவரை, வஞ்சகரை, கொடியவரை,