பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. நாயனார் 73

தீண்டாமை ஒழிய வேண்டும். அறிவையும் உடல் நலனையும் செல்வத்தையும் அழிக்கிற மதுபானம் அகலுதல் வேண்டும். சமூகத்தை நாசம் செய்கின்ற மூட வழக்கங்கள் ஒழிய வேண்டும். டாம்பீகமான கல்யாணச் செலவுகள், குழந்தை விதவைகளின் தொகையை அதிகப்படுத்தும் பால்ய விவாகம், கிழவன் குழந்தையை மணத்தல் போன்ற பொருத்தமற்ற விவாகங்கள் முதலியன ஒழிதல் வேண்டும். சமூகம் ஆற்றலும் பலமும் அடைய பிரிவு உணர்ச்சி மறைய வேண்டும். பிரிந்து கிடக்கின்ற சமூகம் எவ்வித வித்தியாசமு மின்றி ஒன்றுபடல் வேண்டும். -

கைத் தொழில், வர்த்தகம்

கைத்தொழில் அல்லது வர்த்தகத்தினால்தான் தேசங்களும், சமூகங்களும் செழித்து மேன்மையடைகின்றன. மனிதர்கள் சுயேச்சை அடைகின்றனர். ஆகையால் கைத்தொழில்களில் உயர்வான நம் நெசவுத் தொழிலையும், ஜவுளி வியாபாரத்தையும் விருத்தி பண்ண வேண்டும்.

ஒரு காலத்தில் மேலான நிலைமையிலிருந்த நம் நெசவுத் தொழில், தற்காலம் அழிந்து நம்மவர்கள் வறுமை வாய்ப்பட்டிருக்கின்றனர். இதன் காரணம் அந்நிய நாட்டு ஆலைத் தொழிற் போட்டியே. இயந்திரங்களைக் கொண்டு நெசவுத் தொழில் நடத்தப் போதுமான பணம் நம்மிடம் இல்லை. ஆனால் முயற்சியிருந்தால் ஆலைத் தொழிலோடு போட்டி போடிக் கூடும் என்று சென்னைக் கைத்தொழில் இலாகா மாஜித் தலைவர் சர். ஆல்பர்ட் சாட்டர்டன் என்பார் கூறியிருக்கிறார்.

நம் தொழிலை விருத்தி பண்ண ஊக்கம் வேண்டும், விடாமுயற்சி வேண்டும், பெரும்பாலும் விசை நாட்ாத்தறி முறையை அனுசரித்து வருகின்றோம். சரிகை வேஷ்டிகள், பட்டுப் புடவைகள், சட்டைகளுக்கான துணிகள் யாவும் நெய்கிறோம். இவைகளை நயமாயும் பகட்டாயும் பிறர் மதித்து ஏற்றுக் கொள்ளும்படியும் ஆக்க வேண்டும்.

புதிய முறைகளைக் கற்பிக்க நம்மவர்கள் வசிக்கும் இடங்களில் ஆரம்பப் பாடசாலைகளோடு நெசவுப் பாடசாலைகளையும் ஸ்தாபிக்க அரசாங்கத்தாரை வேண்டிக் கொள்ளவேண்டும். ,”

புத்தி கூர்மையுள்ள வாலிபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். இது விஷயத்தில் உதவி புரிய அரசாங்கத்தாரைக் கேட்க வேண்டும். - - -