பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு ஞானியாரடிகள் 97

போற்றியதை அடியேன் உங்களுக்கு ஞாகப்படுத்துகிறேன். எனவே, நாமனைவரும் தமிழ்த்தெய்வ விழா அவ்வப்போது ஆற்றி இன்பம் பெறல் வேண்டும். -

தமிழ்மொழியைப் பலர் பல விதமாகப் பாராட்டியுள்ளார்கள். தமிழின் வளப்பத்தை அருணகிரிநாதர் "புகலரியதான தமிழ்”, “பெரிய தமிழே பாடி" என்று பாராட்டி இருக்கிறார். திருக்குறளில் முதற்குறளும் ஈற்றுக் குறளும் நம் நினைவில் இருத்தல் வேண்டும். அவற்றினும் முதற்குறளின் முதலெழுத்து, ஈற்றுக் குறளின் கடையெழுத்தும் தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்தையும் ஈற்றெழுத்தையும் நினைவுறுத்துவன. இறையனார் அகப்பொருளினும் முதற் சூத்திரத்தின் முதலெழுத்தும், ஈற்றுச் சூத்திரத்தின் கடையெழுத்தும் அகரமும் னகரமுமாய் அமைந்திருத்தல் நோக்கற்பாலது. இந்நூலுள் னகர உயிர்மெய் உயிரோடவல்லது மெய் இயங்காதென்பதை அறிவிக்கிறது). {

இறையனார் அகப் பொருள் முதற்குத்திரம் "அன்பின் ஐந்திணை' எனத் தொடங்குகிறது.

ஆங்கிலம் போன்ற மொழிகள் வீர உணர்ச்சி உண்டாக்குகின்றன. நம் இனிய தமிழ்மொழி எல்லாப் பண்புகளினும் சிறந்த அன்புணர்ச்சியைத் தரும் என்பது புலப்பட அகப்பொருள் முதற் சூத்திரம் அமைந்திருத்தல் கண்டின் புறத் தக்கதாகும்.

தமிழ்மொழி நீங்கலாகப் பதின்மூன்று வேற்றுமொழியுணர்ந்த பத்திரிகையாசிரியர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம் சில தமிழ்ப் பாட்டுக்களைக் கேட்டு ஈசன்பால் மனம் ஈடுபட்டு நோய் நீங்கப் பெற்றார். அதனை அவர் தம் பத்திரிகையில் பலபடப் பாராட்டி எழுதியுள்ளார். தமிழ் பயிலாத பிறமொழி அறிஞர் தமிழ்மொழியை இங்ங்ணம் பாராட்டினால் தமிழின் பெருமையைத் தமிழர்கள் என்னென்று இயம்புவது!

இனி, இவ்வினிய தமிழ் மொழியைக் கற்றறிந்த புலவர்கள் பெருமை போற்றற் குரியதாம். பண்டைக் காலத்தே அர்சர்களும் வள்ளல்களும் புலவர்களை ஆதரித்து இன்பம் எய்தினார்கள். "பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்" என்று ஒவ்வொருவரும் புலவர்களுக்கு நின்மதிப்புக் கொடுத்தார்கள். புலவர்கள் போற்றப் போற்ற நாட்டில் நல்லறிவு பரவும், அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய நூல்கள் உலகில் சந்திர சூரியர் உள்ள வளவும் நின்று இன்பந்தரும்.