14
சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்
இருளில் சூழ்ந்து, குழம்பிய நிலையில் என்ன செய்வது என்று ஏங்கிடுவான்.
நிலக்கடலையின் மேல் ஒட்டை உடைக்காமலே உண்ண விருப்பப்படுவான். அப்படிப் பட்டவனின் வீடு ஒழுங்காக இருக்காது. குடும்பத்தினர் கிளர்ச்சியிலீடுபடுவார்கள்; அவன் அழிவை நோக்கித்தான் செல்ல நேரிடும். அழிவும் புலப்படும்; அவன் காதுகளில் அந்தச் சேதி ஒலிக்கும். அதை உணர்ந்து அவன் தலையும் அசையும். அவனுக்குப் புயல் ஒட்டத்தில் அழிவு நெருங்கிவிடும். இறுதியில் மதிப்பைத் தாங்கிக் கொண்டு, வருத்தமும் வேதனையும் அடைந்து மறைந்து போவான்.
போட்டியிட்டு முன்னேறு
புகழ் ஏணியில் உயரவேண்டும் என்று உன் உள்ளம் துடிப்பதானால் நீ பாராட்டுகளைக் கேட்டு மகிழ்; உன் செவிகள் விரும்புமானால், நீ எடுத்த பிறவியின் நிலையில் இருந்து உன்னை நீயே உயர்த்திக் கொள்ளப் பாடுபடு.
இன்று உயர வளர்ந்து, கிளைகளுடன் கூடிய மரம், ஒரு காலத்தில் மண்ணடியில் விதையாகத் தான் இருந்தது என்பதை உணர். எதையும் சிறப்பாகச் செய்திட முடிவு செய்; பிறரிடம் பொறாமை கொள்ளாதே. உன் திறமைகளை வளர்த்துக்-