பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நாளேயிலேருந்து போடு, நான் இன்னிக்கு முழுதும் எடுத்துண்டு போறேன்-

"சரி, எல்லாம் அம்பாள்தான்்' என்று திருப்திப்பட்டுக் கொண்டாள் அம்மா.

கறுப்புப் பெண் இவனைக் கடக்கும்போது "மிஸ்" என்று வாய்வரையில் வந்த சொல்லை மென்று விழுங்கியபடி அவளைப் பார்த்தான்். அவள் கர்வத்தோடு நடந்து சென்று வண்டி யில் ஏறும்போது பிளாட்பாரத்தின் கோடி யில் இவள் வந்து கொண்டிருந்தாள். வண்டி போய்விட்டது. நெற்றியில் யர்வை பொடித்திருந்தது. இன்று சந்தன வண்ணப் புடவை கட்டியிருந்தாள். முகம் வாடிப் போயிருந்தது. வீட்டிலே ஏதாவது வேலை இருந்திருக்கும். அம்மாவுடன் வாக்குவாதம் வந்திருக்கும். தம்பி, தங்கைகள், ரிடையர்டு ஆன அப்பா இவர்களைச் சமாளித்துக் குடும்ப பாரத்தைச் சுமப்பவளாக இருக்கலாம்.

பாவிகள்! ஏன் இப்படி அடினிச்ச மலரைப் போன்றவளை வேலைக்கு அனுப்புகிருர்களோ? அழகாகக் கல்யாணம் பண் வைக்கக் கூடாதோ!

அவன் குறுக்கும் நெடுக்குமாக உலவி ஞன். ஜே.பியில் இருந்த மல்லிகைச் சரம் மணத்துக் கொண்டே யிருந்தது. குட்டைத் தலே முடியில் இன்று மலர் இல்லை. 'இந்தா இதை வைச்சுக்கோ!' என்று கொடுத்துவிட முடியுமா?

கொடுத்தால்? அவள் சிரிப்பாள். உடனே வாங்கித் தலையில் சூடிக் கொள்வாள். இல்லை, இல்லை. அவனே விழித்துப் பார்த்து 'யூ! ராஸ்கல்!' என்று சத்தம் போடுவாள்.

'அம்பிகே!' என்று நினைவு தெரிந்த நாட் களாய் நினைக்காத ஒருத்தியைச் சலிப்புடன் அழைத்தான்். ரயில் வந்தது. ஏறி அமர்ந் தாள். அம்பிகையைப்பற்றி அம்மா அடிக்கடி சொல்லுவாள். '"நான் சமீபத்திலே திருக் கடையூருக்குப் போயிருந்தேன். அம்பாளேப் பார்த்தப்போ அவள் தீவிரமாகச் சிந்தனை செய்வது போல் இருந்தது. ஞானத்தின் ஒளி வீசிக் கொண்டிருந்தது.'

'போடி போ. நான் பல தடவை திருக் கடையூர் போயிருக்கேன். அபிராமி சிரித்த படி ருக்கிருள்...' அப்பா எதிர்க் கணை தொடுப்பார். o

இவள் முகத்திலே வீசுவது ஞானமா? நகையா?

ரயில் கிளம்பியதும் பூச்சரத்தை வெளியே எடுத்தான்். குப்பென்று மணம் வீசியது. சலிப்புடன் வீட்டுக்குத் திரும்பியவன் எதிரில் கிராம தேவதை கோயில் தென்பட்டது.

சன்னிதி சாத்தியிருந்தது. நட்டிருந்த குலத்தின் மீது சரத்தைப் போட்டுவிட்டு நடந்தான்்.

மாலை 18.2.2 ரயிலில் அவளும், கறுப்புப் பெண்ணும் வந்தார்கள். இருவரும் அந்த ரங்கமாக ஏதோ பேசியபடி வந்தார்கள். கறுப்புப் பெண் ஏதோ சொல்ல இவள் நாணித் தலை குனிந்து நடந்தாள்.

டையில் இரண்டு நாட்கள் விடாமல் மழை பெய்தது. இவனுக்கு நல்ல குளிர் காய்ச்சல். 9.05 ரயில் வருவதைக் கற்பனை யில் பார்த்தபடி படுக்கையில் கிடந்தான்்.

=

வெளிர் நீலப் புடவையில் அவளைக் கண்டான்.

திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்,

гтsёт.

த "'எங்கேடா?' என்று கேட்டபடி அம்மா

கஞ்சியை ஆற்றிக் கொண்டே வந்தாள்.

"சும்மா இப்படி_ 'நன்ன யிருக்கு. இன்

வில்லே. இந்தக் காத்துலே

சும்மா இப்படி!'

ம் ஜூரம் விட

மழையிலே

"கஞ்சியை வைச்சுட்டுப் போ!' என்று இரைந்தான்் அவன்.

அம்மா பயந்தபடி வெளியே போப் விட்டாள்.

பதினைந்து நாட்களுக்கப்புறம் ஜூரம் விட். டது. மேஜை டிராயரைத் திறந்து சிக ரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்்.

ஆனால், அது சந்தன மணம் விசியது.

இவனுக்கு ஜூரம் விட்ட பிறகு கூட மழை விடவில்லை. "ஆகாயத்திலே இவ்வளவு ஜலத்தை எப்படி "ஸ்டோர்' பண்ணிஞ?" என்று குழந்தைத்தனமாக மனம் கேட்டது.

அறையைப் பெருக்க வந்த அம்மா, 'ஏண்டா இப்படிச் சிகரெட் குடிக்கறே: உடம்பு என்னத்துக்காகும்?' என்று ஆதங் கப்பட்டாள்.

'உடம்பைப் பத்தி இப்ப யார் கவலைப் படரு?"

அடடா! பெரிய ஞானக் கொழுந்தா மாறிண்டு வரயே. . .' என்று ஆச்சரியப் பட்டாள் அம்மா. பிறகு நீளமான கவர் ஒன்றைக் கொண்டு வந்து 'உனக்கு அம்பா எளிடம் பக்தி வந்தவுடனேயே வேலை கெடச் சுது பார். காசியிலே சர்வகலாசாலையிலே உன்னைப் புரபொலரா எடுத்துண்டு இருக் காளாம். நேத்திக்கே இந்தக் கவர் வந்தது. உனக்கு நல்ல ஜூரம் இருந்தது. அதேைல காண்பிக்கலை' என்றபடி அவனிடம் கொடுத் தாள். அவன் அதை மேஜையின் மீது விசி எறிந்தான்். மழைக் கோட்டை மாட்டிக் கொண்டு வாசலுக்கு வந்தான்்.

'ஏண்டா மழையிலே போறே: கேடா?' என்று அப்பா கேட்டார்.

அவன் அவரைத் தீர்க்கமாகத் திரும்பிப் பார்த்தான்். சுடுகாட்டுக்கு ' என்று மழையின் இரைச்சலையும் மீறிக் கத்திய படியே நடந்தான்்.

பிளாட்பாரத்தில் 9.05 ரயில் வந்து நின் Д05/ - அவளுடன் கறுப்புப் பெண்ணும் இன்னுெருவனும் நின்றிருந்தார்கள். பெட் டிகள், படுக்கை, தகர டப்பாக்கள், எல்லாம் அவளுடன் வண்டியில் ஏற்றப்பட்டன. அவ னும் அவளும் வண்டியில் ஏறிஞர்கள். அவள் கழுத்தில் மஞ்சள் சரடு மின்னியது. மலர் போன்ற பாதங்களின் விரல்களில் மெட்டிகள் குலுங்கின. கறுப்புப் பெண் கண்ணிர் வழிய அவளுக்கு விடை கொடுத் தாள்.

அவனுக்குச் சட்டென்று தன் வீட்டில் மேஜையின் மீது வீசியெறியப்பட்ட கவர் நினைவுக்கு வந்தது. சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துச் சுவைத்துப் புகைத் தான்். அதில் சந்தன மணம் வீசவில்லை. நிகோடின் மணத்தது!

எங்