பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3요 தெருக் கோடியை நெருங்கியதும் ஈசுவரன் கோவில் கோபுரம் தென்பட்டது. கைகூப்பி வணங்கினுள் அலமு. வீட்டை அடைந்ததும் வாடியம்மா............ ஏன் இப்படி இளேத்திருக்கிறது. உடம்பு ?’ என்று கேட்டாள் கனகம், பெண்ணேப் பார்த்து. ' இளைத்தா இருக்கு?’ என்று சிரித்தாள் அலமு. பின்னே என்ன ? பருத்து விட்டதாக நினைப்போ ?” அலமு தன் உடலைப் பார்த்துக் கொண்டாள். வாஸ்த வத்தில் அவள் சற்று பூசினுற்போல் பருத்துத்தான் இருந்தாள். அம்மாவுக்கு இது தெரியவில்லையே! விஷயத்தைச் சொன்னுல் பூரித்துப் போக மாட்டாளா ? இரண்டு பெட்டிகள், ஒரு படுக்கை, பழக்கூடை, ஒலைத் துரக்கு, நாகரிகப் பை இவ்வளவும் வீட்டுக்குள் வந்தன. கனகம் அவற்றைப் பார்த்ததும் பெருமை அடைந்தாள். உடனே ஒடிப்போய்க் கோமளத்தைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். வாய்க்கு வாய் தன் பெண் வாழ்க்கைப்பட்டி ருக்கும் பெரிய குடும்பத்தைப் பற்றிப் பெருமை பேசும் அவள் வாயை மூட அதுதான் வழி.

  • மாப்பிள்ளே உடம்புக்கு ஒன்றுமில்லாமல் இருக் காரர ???

'உம்...............”

  • ப்ரமோஷன் ஆயிருக்காமே 2”

யார் சொன்ன ?’ " நாலு நாள் முன்னடி பட்டணத்திலிருந்து கண்ணன் வந்திருந்தான். அவன்தான் சொன்னன்............உனக்கு எப்படிடா தெரியும்னு கேட்டேன். அவன் சிநேகிதன் ஒருத்தன் வந்திருக்கானும், அவன் சொன்னதாக............” " எனக்கு ஒண்னும் தெரியாதம்மா. உன் மாப்பிள்ளை அதை யெல்லாம் என்கிட்டே சொல்லி விட்டா, அப்புறம் என்னே யாராலேயும் கட்டிப் பிடிக்க முடியாது............"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/38&oldid=830383" இலிருந்து மீள்விக்கப்பட்டது