பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


ஐந்து ரூபாய்க் காசு. வீட்டில் காலணு கிடையாது. காலணு என்ருல் காலணு கிடையாது. அன்று தேதி இருபத்தைந்து. கைத் தடியைப் பூட்சில் தட்டிக் கொண்டே நின்ருன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு தடவை பார்த்தவர்கள் அவன் முகத்தை மறக்கமுடியாது. முகத்தில் ஆருத அம்மைத் தழும்பு. எவ்வளவு அடர்த்தியான புருவம் ! மண்டி வளர்ந்து, இரு புருவமும் ஒன்ருக இணைந்துவிட்டது. காது விளிம்பில் ரோமம். மூக்கிற்குக் கீழ் கருவண்டு உட்கார்ந்திருப்பதுபோல் பொடி மீசை, அவன் பார்வை தாழ்ந்து பறக்கும் பருந்தின் நிழல் மாதிரி ஒடிற்று. நீளமாக ஓடிற்று வட்டம் போட்டது : குறுக்கும் மறுக்கும் பாய்ந்தது.

  • ஒன்றும் அகப்படவில்லை.

கழுத்தில் வேர்வை வழிந்தது. முகத்தில் சோர்வு. அங்கமெல்லாம் அசதி. கர்வீஸில் புகுந்த பின்பு இன்று போல ஒரு நாளும் விடிந்ததில்லை. யார் முகத்தில் விழித்தோமென்று யோசித் தான். கண் விழித்ததும் எதிரே, சுவர்க் கண்ணுடியில் தன் முகம் தெரிந்தது ஞாபகத்திற்கு வந்தது ; சிரித்துக் கொண்டான். . . . . . ; * பகற் காட்சி சினிமா முடிந்து, மனித வெள்ளம் தெரு வெங்கும் வழிந்தது ; நெரிசலிலிருந்து விலகி நின்று கொண்டான் அவன். கூட்டம் குறைந்ததும் மீண்டும் நடந்தான். - நாலு மணிக்கு ஆரம்பித்த அலைச்சல், மணி ஏழு அடித்துவிட்டது, ஏழரை அடித்துவிட்டது. இன்னும் சில நிமிஷங்களில் எட்டு அடித்து விடும். பொழுது போய்க் கொண்டே இருந்தது. ஒன்றும் அகப்படாமலேயே பொழுது போய்க் கொண்டிருந்தது.