பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இளங்குழந்தைகள் உள்ளம் கண்ணுடி போன்றது. அந்த இளம் உள்ளத்தில் படியும் எண்ணங்களே அவர்தம் வருங்காலத்தை உருவாக்க வல்லன. எனவே அவர்தம் உளம் கொள்ளும் வகையில் கல்லனவற்றைப் பற்றியும் நல்லவர்களைப் பற்றியும் எளிய முறையில் விளக்கும் கடப் பாடு கற்றவர் அனைவருக்கும் உண்டு. - சென்னை வானெலி கிலயத்தார் அந்த வகையில் - பள்ளிப்பிள்ளைகளுக்குரிய ஒலி பரப்பு வரிசையில் - நல்ல அறிவுரைக் கதைகளையும் வாழ்க்கைவரலாறு, வாழிடம் ஆகியவற்றையும் விளக்கிக் காட்டுகின்றனர் அந்த வரிசை களில் அமைவதற்கென நான் எழுதிய சிலவே இன்று இந்த நூல் வடிவில் வெளிவருகின்றது. சிலவற்றின் ஒலிபரப்பிய நாட்கள் கிடைக்கப் பெறவில்லை. எனினும் கடைசியில் உள்ள சிறுகட்டுரை ஒன்று தவிர்த்து அனைத்தும் சென்னை வானெலி நிலையத்தில் ஒலி பரப்பப் பெற்றவையேயாம். இவை பற்றி எழுதச் செய்து பிள்ளைகள் பயன் பெறச் செய்த வானெலி கிலேயத்தாருக்கு என் நன்றி. இவை ஒலி பரப்பாகிய காலத்திலெல்லாம் பலர் இவற்றைத் தொகுத்து நூல்வடிவாக்கித் தரவேண்டினர். அவர்தம் விழைவின் படி இன்றே இந்நூல் வெளிவரு கின்றது. இளங்குழந்தைகள் உள்ளத்தில் நல்லவர் - கல்லவை பற்றிய நல்லெண்ணங்கள் முகிழ்க்க இந்நூல் ஓரளவு துணை புரியும் என நம்புகிறேன். இந்நூல் வெளிவர ஊக்கிய அனைவருக்கும் என் நன்றி உரித்து. தமிழ்க்கலை இல்லம் சென்னை 30 அ. மு. பரமசிவானந்தம். 11, 2, 76