உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________ 41 சிறுவர் இலக்கியம் 33. சின்ன தம்பி (அக்காள் கூறுவது) 1. சின்ன சின்ன தம்பியே! சிறந்த நல்ல தம்பியே! அன்னை வைத்த வென்னியில் அழுக்குப் போகக் குளித்திடு. 2. கொக்கின் வெள்ளைப் போலவே கோடிச் சட்டை போட்டுக்கொள்; காக்கை கருப்புப் போலவே கண்ணில் மையை எழுதிக்கொள்; 3. சேவல் சிவப்புக் கொண்டைபோல் சிவந்த பூவைச் சூடிக்கொள் ஆவ லாகச் சின்னபையை அழகுக் கையில் பிடித்துக்கொள். 4. பள்ளிக் கூடம் போகலாம் பாடம் அங்குப் படிக்கலாம் துள்ளிக் குதிச்சி ஆடலாம் துன்பம் நீங்கப் பாடலாம். --