உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________ 43 சிறுவர் இலக்கியம்

4. உண்மை வேண்டுமா? தம்பீ! திண்மை வேண்டுமா?
உண்மை பெற்றால் திண்மை வரும்
உண்மை வேண்டுமே; எனக்கு
உண்மை வேண்டுமே.

வேறு
5. அன்பும் ஊக்கமும் கல்வியும்
        உண்மையும் இருந்தால்
பின்பு தோன்றுவ யாவையும்
       நல்லவே தோன்றும்
இன்பம் எய்திட விரும்புவோர்
      யாவரும் மனத்தில்
அன்பை ஊக்கத்தைக் கல்வியை
     உண்மையை அடைக.