உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ 57 சிறுவர் இலக்கியம் 46. குழந்தைச் சிரிப்பு 1.வானத்திலே வெள்ளைத் திங்கள் வண்ண நிலா வீசுது கானிலுள்ள முல்லைக் கொடிகள் கண்டுகண்டு சிரிக்குது. 2. அன்னை இடையில் அமர்ந்திருக்கும் அழகுக் குழந்தை மகிழ்ச்சியாக சின்னகையை நீட்டி அழைச்சு சிரிச்சுச் சிரிச்சு மகிழுது. 3. சிரிப்பைக் கொடுக்கும் மதியைப்பார் சிறந்தநிலா ஒளியைப்பார் சிரிக்கும் முல்லைப் பூவைப்பார் சிரிக்கும் குழந்தை பல்லைப்பார் 4. வெள்ளை யான நிலாவையும் விரிந்த முல்லைப் பூவையும் உள்ளத் தாலே உவமையாக்கி உயர்ந்த குழந்தை சிரிப்பைப்பார். --