பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கும். நீலகிரி மாவட்டத் தலை நகர். இதனை ஊட்டி என்றும் கூறு வர். தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வரும் தொதவர்கள் இதனை 'ஒத்தகமந்து' என்று அழைத்தனர். 'ஒத்தைக்கல் மந்து' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகும் இது. இது எல் லாப் பருவத்துக்கும் ஏற்ற இடமாகும். உதகமண்டலம் கடல் மட்டத்திலி ருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத் தில் அமைந்திருக்கிறது. இதன் மக் கள் தொகை சுமார் 78ஆயிரம் ஆகும். இந்நகரிலிருந்து 2 கி.மீ. உயரத்தில் தொட்டபெட்டா என்ற மலைச் சிக ரம் இருக்கிறது. இதுவே தமிழ்நாட் டில் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 2,640 மீ. ஆகும். இங்கு ஒரு அழகான ஏரியும் உண்டு. அழகிய பூங்காவோடு கூடிய தாவர வியல் தோட்டமும் இருக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட் டிக்கு இருப்புப்பாதை உண்டு. வளைந்து வளைந்து செல்லும் இருப்புப்பாதை வழியே இரயிலில் செல்லும் போது மலைக்காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக இருக்கும். சாலை வழி இங்கிருந்து மேட்டுப் பாளையத்திற்கும் மைசூருக்கும் செல் கிறது. இங்கு யூகலிப்டஸ் மரங்களிலிருந்து நோய்களுக்கான தைலம் தயாரிக்கும் தொழிற்சாலை உண்டு. இங்குள்ள கொய்னா தோட்டத்திலிருந்து கொய் னா மருந்துகள் தயாரிக்கப்படுகின் றன. உருளைக்கிழங்கு, முட்டைக் கோசு போன்ற காய்கறிகள் ஏராள மாக இங்கே பயிரிடப்படுகின்றன. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள தலைப்பகுதிகளில் தொதவர்கள் என் னும் பழங்குடியினர் கூண்டு போன்ற குடிசைகளில் வாழ்கின்றனர். மற்றும் உப்பு படகர், இருளர், கோத்தர் முதலான மலை வாழ் இன மக்களும் வாழ்கின் றனர். இங்கு இந்துஸ்தான் ஒளிப்படச் சுருள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உப்பு சுவைக்காக உணவோடு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்றியமையாப் பொருள் உப்பு ஆகும். 'உப்பில்லா பண்டம் குப்பை யிலே’ என்பது பழமொழி. உப்பில் பலவகைகள் இருந்தபோதிலும் நாம் சாதாரணமாக உணவில் சேர்க்கும் பொருளே உப்பு என அழைக்கப்படு கிறது. இதற்குரிய இரசாயனப்பெயர் சோடியம் குளோரைடு என்பதாகும். சோடா உப்பு, பேதி உப்பு போன்ற வை வேறு சில இரசாயன உப்பு வகைகள் ஆகும். உப்பு பெரும்பாலும் கடல்நீரிலி ருந்து தயாரிக்கப்படுகிறது. தரையி லிருந்தும் சிறிய அளவில் உப்பு கிடைக்கிறது. கடல் நீர் உப்புக் கரிக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. இக் கடல்நீரைப் பாத்திகளில் பாய்ச்சித் தேக்கி வைப்பார்கள். வெயில் தரும் வெப்பத்தால் நீர் ஆவியாகிவிடும். உப்பு தரையோடு படிந்து நிற்கும். இவ்வாறு உப்புப் படிந்த பாத்திகளே 'உப்பளங்கள்' என அழைக்கப்படு கின்றன. கடற்கரை ஓரமாக உள்ள பகுதிகளில் இத்தகைய உப்பளங்கள் உள்ளன. கடற்பகுதி இல்லாத சில இடங்களில் பூமிக்கடியில் கிடைக்கும் உப்பை சுரங்கம் மூலம் வெளியே கொண்டு வந்து பயன்படுத்துகிறார் கள். சிறந்த வகை உப்புக் கிடைக்கும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்தியா வின் தென்கிழக்குக் கடற்கரைப்பகுதி