பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 செய்யவேண்டிய பணிகளை ஒரு சில மணித் துளிகளில் கணிப்பொறிகள் செய்து முடித்துவிடுகின்றன. நுண் அறுவை மருத்துவம் முதலாக வாழ வியல் துறை அனைத்துக்கும் பயன் படும் வகையில் இக்கணிப்பொறிகள் அமைந்து வருகின்றன. இவை செயற்கை மனிதனையும் இயக்குகின் றன. தகவல்களைச் சேமித்து, வேண்டும் ப்ோது அவற்றைக் கணித்துப் பெற் றுப் பயன்படுத்த முடிவது இதன் தனிச் சிறப்பாகும். கதிரியக்கம்: சில பொருள்களிலி ருந்து வெளிப்படும் கதிர் மற்ற பொருள்களை ஊடுருவிச் செல்லும் சக்தி படைத்தவை.அவ்வாறு வெளிப் படும் கதிர்களின் இயக்கமே "கதி ரியக்கம் என அழைக்கப்படுகிறது. இதை பிரெஞ்சு அறிவியல் ஆய் வாளர் ஹென்றி பெக்ரெல் என்பவர், எதிர்பாராத நிலையில் கண்டறிந்தது சுவையான தகவல் ஆகும். அவர்அப் பொழுது எக்ஸ் கதிர்கள் ஆராய்ச்சி யில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். அவரது மேசையின் மேல் சிறிதளவு யுரேனியத் துண்டு வைக்கப்பட்டிருந் தது. அருகில் இருந்த ஒளிப்படத் தகட்டில் இரசாயன மாறுபாடு ஏற்பட் டிருப்பதைக் கண்டார். இதற்கு அரு கில் இருந்த யுரேனியத்திலிருந்து வெளிப்பட்ட கதிர்களே கார ணம் என்பதையும் கண்டறிந்தார். யுரேனியத்திலிருந்து வெளிப்படும் கதிர் உலோகப் பொருள்களையும் ஊடுருவ வல்லன என்பதை அறிந் தார். தொடர்ந்து செய்த ஆராய்ச்சி களிலிலிருந்து யுரேனியம் மட்டுமல் லாது வேறு சில தனிமங்களும் கதிர் வீச்சை வெளிப்படுத்துகின்றன என் ☾Ꮧ Ꮏ-Ꭻ ᏗᏌᏓᏗ பதை ஆய்ந்தறிந்தார். அவற்றுள் தோரியம், ரேடியம், ஆண்டினியம் போன்றவை இயற்கையிலேயே கதிர் வீச்சுத் தன்மையுடையனவாகும். சில கதிரியக்கத் தனிமங்களைச் செயற்கை யானதாகவும் கண்டுபிடித்துள்ளார் ó56lᎢ , - கதிரியக்க வினை எவ்வாறு நிகழ் கிறது என்பதைக் காண்போம். ஒவ் வொரு அணுவிலும் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன. அணுவின் மையப் பகுதி கரு ஆகும். எலெக்ட்ரான் இந்த கருவை வேக மாகச் சுற்றி வருகின்றன. சில தனி மங்களில் அணுக்கள் தாமாகச் சிதை வதும் உண்டு. அப்போது அந்த அணுக்களிலிருந்து புரோட்டான் களும் நியூட்ரான்களும் வெளியேறு கின்றன. இதுவே கதிரியக்கம் ஆகும். கதிரியக்க்ம் உயிர்களுக்குப் பெருந் தீங்கு செய்யும். கதிரியக்க ஆய்வாளர் கள் ஆய்வின்போது தக்க பாதுகாப் பான ஆடைகளையே உடுத்துவர். காரீயத்தாலான கண்ணாடிகளையே அணிவர். பழங்காலப் பொருள்களின் காலத் தைக் கணிக்க கதிரியக்கம் பெரிதும் பயன்படுகிறது. கப்பல்: நீர்ப் பகுதிகளாகிய கடல், ஆறு, ஏரி போன்றவைகளைக் கடக்க உதவும் போக்குவரத்துச் சாத னமே கப்பல். இவை நீரின் ஆழம், பரப்பு இவற்றிற்கேற்ப சிறிய, பெரிய அளவுகளில் அமையும். முற்காலங்களில் பெரும்பாலும் மரத்தாலும் இரும்பாலும் உருவாக்கப் பட்ட கப்பல்கள் பாய் மரங்களின் துணைகொண்டு காற்றின் உதவி யால் சென்று வந்தன. பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால்