பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகள் சென்றார். அதன்படியே ஒழுகி 'பாரிஸ்டர்’ பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் சிறிது காலம் வழக் கறிஞர் தொழில் செய்தார். பின்னர் தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள இந்திய வணிகர் ஒருவரது வழக்கை நடத்த தென்னாப்பிரிக்கா சென்றார். இந்தியருக்கு எதிராகத் தென்னாப் பிரிக்க அரசு வகுத்த சட்டங்களை எதிர்த்துப் போராடலானார். சுமார் 21 வருடங்கள் இப்போராட்டம் நீடித் தது. இப்போராட்டத்தின் போது அன்பு வழியை மேற்கொண்டார். அகிம்சை வழியிலான சாத்வீகப் போராட்டத்தை நடத்தினார். அரசு இவரைப் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தது. இறுதியில் அரசு பணிந்து இந்தியருக்கு எதிரான சட்டங்களை நீக்கியது. அதன்பின் காந்தியடிகள் இந்தியா திரும்பினார். அச்சமயம் இந்தியாவிலிருந்து ஆங் கில ஆட்சியை நீக்கி விடுதலைபெறச் சுதந்திரப் போராட்டம் நடந்து வந் தது. இவ்விடுதலைப் போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கமாக நடத்திக் கொண்டிருந்தது. கோபாலகிருஷ்ண கோகலே போன்றவர்களின் வேண்டு கோளை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தலானார்.அதே சமயம் இந்திய மக்களின் வறுமையைப் போக்கி வாழ்க்கைத் த ர த் ைத உயர்த்த ஆழ்ந்து சிந்தித்தார். மக்க வளின் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாகவுள்ள சமூகத் தீங்குகளை களைய முற்பட்டார். இதற்காக கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு போன்ற திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தலானார். இத னால் இந்திய மக்களை வாழ்விக்க வந்த “மகாத்மா'வாகப் போற்றிப் புகழ்ந்தனர். 141 ஆங்கில ஆட்சியினர் இந்திய விடு தலைப் போராட்டத்தை அடக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றினர். இதை ஏற்காத இந்திய மக்கள் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடு பட்டனர். நேர்மையற்ற ஆட்சியை எதிர்த்து சட்டமறுப்பு, இயக்கத்தை 1920ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். ஆங்கிலேயர் கடுமை யான அடக்குமுறைகளைக் கொண்டு மக்களைப் பெருமளவில் சிறையில் அடைத்தனர். சித்திரவதை செய்த னர். சுட்டுக் கொன்றனர். அரசாங் கமும், பொது மக்களும் வன்முறை யில் ஈடுபட்டதால் இயக்கத்தை உடனே நிறுத்தினார். நடந்த வன் செயல்களுக்காக வருந்தி ஐந்து நாட் ; கள் உண்ணாநோன்பு மேற்கொண் டார். t 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட வகுப் புக் கலவரங்களால் வருந்திய காந்தி அடிகள் வகுப்புக் கலவரங்களை நிறுத்தக்கோரி 21 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போர் முடி வடைந்தபோது இந்தியா விடுதலைப் போ ரா ட் ட ம் உச்சக் கட்டத்தை அடைந்தது. காந்தியடிகள் 1942 ஆகஸ்ட் எட்டாம் நாள் வெள்ள்ை யனே வெளியேறு' எனும் இயக்கத் தைத் தொடர்ந்தார். காந்தியடிகள் உட்பட முக்கியத் தலைவர்கள் எல் லோரும் சிறையில் அடைக்கப்பட் டனர். 1944ஆம் ஆண்டுபிப்ரவரி 22 அன்று காந்தியடிகளின் துணைவி யார் கஸ்தூரி பாய் சிறையில் காலமா னார். ஆட்சிமீது மக்களுக்கு மேலும் வெறுப்பும் கசப்பும் வளர்ந்த்ன. அச்சமயத்தில் இங்கிலாந்தில் இந்திய விடுதலையை விரும்பும் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது.