பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பழங்காலத்தில் இப்போது உள் ளது போல் நாணயங்கள் இல்லை. ஒருவருக்கு ஒரு பொருள் தேவை என்றால் அவருக்கு வேண்டிய வேறொரு பொருளைக் கொடுத்துப் பெற்றுக் கொள்வார். இதுவே “பண்டமாற்றுமுறை என்பது. அக்காலத்தில் மாடு, உப்பு, மணிக் கற்கள் போன்றவற்றை நாணயமாகப் பயன்படுத்தி வேண்டிய பொருளைப் பெற்று வந்தனர். அதன்பிறகு நாள டைவில் குறிப்பிட்ட ஒரு பொருளை, நாணயமாற்றாகப் பயன்படுத்தும் முறை வழக்கிற்கு வந்தது. தமிழகத்தில் சேர, சோழ, பாண் டிய மன்னர்கள் நாணயங்களைப் பயன்படுத்தி வந்தார்கள். அவை பொன், வராகன், பலம், கழஞ்சு என்பன நாணய அளவுகளாகும். இக் காலத்தில் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த ரோமானியர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. ரோமானியர் நாணயங்கள் பொன்னாலும் வெள் ளியாலும் ஆனவைகளாகும். இப்போதுள்ள ரூபாய் நாணயத் தின் வடிவை இந்தியாவில் உரு வாக்கியவர் ஷெர்ஷா என்னும் டெல்லியை ஆண்ட மன்னராவார். இவரது காலம் பதினாறாம் நூற் றாண்டாகும். ஆங்கிலேயர்களால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த ரூபாய், அணா எனும் நாணய முறை 1957 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அதன் பிறகு தசம முறை நடை முறைக்கு வந்தது. இன்றளவும் அந்த முறையே கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இன்று உலகெங்கும் அச் சிட்ட தாள் நாணயம், தங்கம், வெள்ளி, செம்பு,நிக்கல், அலுமினியம் போன்ற அச்சிட்ட உலோக நாண யங்களும் பயன்படுத்தப்பட்டு வரு நி:தட்டன் கின்றன.அரசு தவிர வேறு யாரும் நாணயங்களை அச்சிட உரிமை இல்லை. அது கொடுங்குற்றமாகும். பழைய நாணயங்கள் அன்றைய மக்களின் வாழ்க்கை முறை, வரலாறு ஆகியவைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. கிமோனியா: இது ஒருவகைக் காய்ச்சலாகும். இது நுரையீரல் அழற்சியால் ஏற்படுகிறது. நுரையீர லில் சிற்றறைகள் நிறைய உள்ளன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நச்சு நுண்ணுயிர்களால் இச்சிற்றறைகள் நச்சுத்தன்மை பெறுகின்றன. இத னால் ஏற்படும் அழற்சியால் நிமோ னியா காய்ச்சல் உண்டாகிறது. நிமோனியாகி காய்ச்சல் பெரும் பாலும் குறுகலான, காற்றோட்டமில் லாத இடங்களில் வாழும் மக்க ளையே அதிகம் பீடிக்கிறது. இந் நோய் திடீரென்று தோன்றினாலும் இதன் தன்மையைச் சில நாட்கள் கழிந்த பிறகே சரியாகக் கண்டறிய முடியும். நோய் தோன்றுகிறபோது குளிர் காய்ச்சல் அதிகமாக இருக்கும். அடிக்கடி இருமல் உண்டாகும். நெஞ்சு வலி, தலைவலி அதிக மாயிருப்பதோடு தூக்கமின்மையும் ஏற்படும். இந்த அறிகுறிகளைக் கொண்டு நிமோனியாக் காய்ச்சலின் தன்மையை அறியமுடியும். நச்சு நுண்ணுயிர் அல்லாத நிமோ னிய காய்ச்சலும் உண்டு. கியூட்டன் இவரது முழுப் பெயர் ஐசக் நியூட்டன் என்பதாகும். அறி வியல் மேதைகளில் மிக முக்கியமான வராகப் போற்றப்படுவர்.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் கணிதத் திலும் வானவியலிலும் மிகச் சிறந்து விளங்கியவர். பல புதிய அறிவியல்