உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


சிலப்பதிக்காரக் காட்சிகள் என்னும் பெயர் கொண்ட இச்சிறு நூல், முத்தமிழ்க் காப்பியம் ஆகிய சிலப்பதிகாரம் என்னும் சீரிய செந்தமிழ் நூலில் உள்ள கோவலன்-கண்ணகி வரலாற்றைப் பல காட்சிகளாகப் பகுத்துக் கூறுவதாகும். காட்சிகள், தேவையான இடங்கள் விளக்கமாகவும் தேவையற்ற செய்திகள் சுருக்கமாகவும் அமையப் பெற்றவை. பெரும் புகழுடன் இருந்து கடலுக்கு இரையான பூம்புகார்ச் சிறப்பு, அக்கால மக்கள் வாழ்க்கை நிலை, சமுதாய நிலை, அரசியல் நிலை. பழக்க வழக்கங்கள், அக்காலக் கலைகள் முதலிய வற்றைப் பற்றிய பல விவரங்களை இச்சிறு நூல் கொண்டு உணர்தல் கூடும்.

சேக்கிழார் அகம்,

மா. இராசமாணிக்கம்

சென்னை.