பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. வழக்குரைகாதையில்

கண்ணகி பாண்டியனின் மன்றத்தில் நீதி கேட்டு வழக்காடிய காட்சி இலக்கியத்தில் தனிச்சிறப்பு மிக்க இணையற்ற ஒரு காட்சியாகும். தனது கணவன் கள்வன் அல்லன் என்று வாதாடி, ஆதாரம் காட்டி, நீதியை நிலை நாட்டுகிறாள். இந்த வழக்குரை விவரம் இன்றைய கால நமது சட்டக் கல்விக்கும் நீதிமுறைக்கும் கூட வழி காட்டுவதாகும்.

சூதிற் பணயமாகி விட்ட பாஞ்சாலியை சபைக்கு அழைத்துவர துரியோதனைன் ஆணையிட்டபோது உலகில் தர்மக்குழப்பம் ஏற்பட்டதாக பாரதி கூறுகிறார். அதர்மங்களும், அக்கிரமங்களும், அநீதிகளும், அரசியல் பிழைகளும் ஏற்படும் போது அவை மேலோங்கும்போது உலகில் தர்மக்குழப்பம் ஏற்படுகிறது. அதைப்பற்றி பாரதி கூறுவதைக் கேளுங்கள்.

“தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக
பெருமைத்தவங்கள் பெயர் கெட்டு மண்ணாக
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய
மோன முனிவர் முறை கெட்டுத் தாமயங்க
வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட
நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக
“கந்தருவரெல்லாம் களையிழக்கச் சித்தர் முதல்
அந்தரத்து வாழ்வோரனைவேரும் பித்துறவே
நான்முகனார் நாவடைக்க, நாமகட்கு புத்திகெட
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத்
திருமாலும்
அறிதுயில் போய் மாற்றாங்கே ஆழ்ந்த
துயிலெய்திவிட
செறிதரு நற்சீரழகு செல்வமெலாம் தானாகும்
சீதேவி தன்வதனம் செம்மைபோய் காரடைய
மாதேவன் யோகம் மதிமயக்கமாகிவிட
வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள்

மூல மாசக்தியொரு மூவிலை வேல்கையேற்றாள்,