பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. கால்கோட் காதையில்

கண்ணகி சிலைக்குக் கல்லெடுக்க சேரமன்னன் இமயத்திற்குச் செல்வதற்கான தயாரிப்புகளைச் செய்து படைகளையும் பரிவாரங்களையும் திரட்டி

"ஞாலங்காவலர் நாட்டிறை பயிரும்
காலைமுரசம் கடைமுகத் தெழுதலும்
"நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ்சென்னி
உலகு பொதி உருவத்துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச்சென்னி இறைஞ்சி வலம் கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானை பிடர்த்தலை ஏறினன்,
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென,
ஆடக மாடத்தறிதுயில் அமர்ந்தோன்
சேடங்கொண்டு சிலர் நின்றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணி மணிப் புயத்துத்

தாங்கினனாகித் தகைமையிற் செல்வுழி"

என்று சிவபெருமானின் ஆசியையும்

திருமாலின் ஆசியையும் பெற்று வட

திசை நோக்கிப் புறப்படலாயினன்"

என்று காப்பியச் செய்யுள் வரிகள் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன.

உலகத்தை ஆளும் பல நாட்டு மன்னர்களும் தாங்கள் செலுத்தவேண்டிய திறைப் பொருளைக் கொண்டு வந்து செலுத்துமாறு காலை முரசு கடை வாயிலில் எழுந்தது. நிலவொளி பரப்பும் பிறைசூடிய, நீண்ட சடை முடியினையுடைய உலகை