பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இக்குரவைக் கூத்தினுள் உள்வரியாகிய பாட்டினால் கருடப்பறவையில் ஊர்ந்து வருகின்ற செங்கண் நெடுமாலாகிய நமது கடவுளைப் பாடி மகிழ்வோம் என்று கூறுகிறாள்.

அடுத்து உள்வரிப் பாட்டுகளாகப் பாண்டிய, சோழ, சேர மன்னர்களைத் திருமாலுடன் இணைத்துச் சிறந்த பாடல்களைப் பாடி ஆடுகிறார்கள்.

1. "கோவா மலையாரம் கோத்த கடலாரம்

தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்தொசித்தான் என்பரால்.

2. பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையான் என்பரால்.

3.முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்

மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில்தோள் ஒச்சிக் கடல்கடைந்தான் என்பரால்” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

கோக்கப்படாத பொதிகை மலையின் ஆரமாகிய சந்தன மாலையும் கோக்கப்பட்ட கடல் ஆரமாகிய முத்து மாலையும், தேவேந்திரன் கொடுத்திட்ட மணியாரமும் செந்தமிழ் நாட்டினுள் தென்னாட்டை ஆளுகின்ற பாண்டிய மன்னனுடைய மார்பில் கிடந்து திகழ்வனவாம். அவ்வாரம் தேவேந்திரன் பூனாரம் உள்ளிட்ட மூவகை ஆரங்களையும் பூண்டு திகழும் அப்பாண்டிய மன்னன்தான் யாவனோ வெனில் அவன்தான் வளம் மிகுந்த கோகுலத்தில் ஆனிரைகளை மேய்த்துக் குருந்த மரத்தை முரித்தொழித்த கண்ணபிரானே என்று அறிந்தவர்கள் கூறுவர்.

பொன்னைப் போன்ற இமயமலையின் கொடுமுடியிலே தனது புலிப்பொறியைத் தனது வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்து இந்நிலவுலகத்தை ஆட்சி செய்தான், மதில்கள்