பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

6. தமிழும் தமிழ்நாடும்

சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் சிறந்த தமிழக சுவைமிக்க பேரிலக்கியங்களாகும். சிலப்பதிகாரக் காப்பிய முத்தமிழையும் மூன்று தமிழ் நாடுகளையும் மூன்று தாபிய மன்னர்களையும் சிறப்பித்துக் கூறும் தனிப் பெருங்காப்பிய மாகும்; தனிப்பெரும் தமிழ்க் காப்பியமாகும். சிலப்பதிகா சிறந்த தமிழ்க் காப்பியம் மட்டுமன்று, தமிழ் மொழியில சிறப்பை, தமிழிசையின் சிறப்புகளை, தமிழ் மண்ணி. சிறப்புகளை, தமிழ் மன்னர்களின் சிறப்புகளை, த.பெ. மன்னர்களின் தலைநகரங்களின் சிறப்புகளை, தாபிய மன்னர்களின் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் நெஞ்சை அள்ளும் தலைசிறந்த தமிழ்க் காப்பியமுமாகும்.

சிலப்பதிகாரக் காப்பியம் முத்தமிழை இணைக்கிறது மூன்று தமிழ் நாடுகளை இணைக்கிறது; மூன்று தமிய மன்னர்களின் ஒற்றுமையை, அவர்களின் புகழை பரப்புகிறது. மூன்று தமிழ் மன்னர்களும் இமயம்வரை சென்று தங்கள் கொடிகளைச் சின்னங்களைப் பொறித்த, வீரத்தையும் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.

சிலப்பதிகாரக் காப்பியம், தமிழ் மக்களின் நாகபி. வளர்ச்சியைக் கல்வி கலாச்சார வளர்ச்சியை, தொழில் மற்றும் சாகுபடி வளர்ச்சியை, வாணிபப் பெருக்கத்தை, விவரிக்கிறது.

திவ்யப்பிரபந்தம் சிறந்த நல்ல தமிழ்ச்சொற்களில் ஆழ்வார்கள் பாடியுள்ள பெருமைக்குரிய பக்தி நூலாகும் அது வைணவ பக்தி நூல் என்பதை நாம் அறிவோம் அப்பிரபந்தப் பாசுரங்களில் பக்திச்சுவையுடன் தமிழ். சுவையும் இணைந்து மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது