பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் ஒருங்குதொக்கு அன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவன் ஈட்டக் குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்”

ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசர்களேகூட போற்றிப் புகழக்கூடிய அளவில் செல்வச் செழிப்புமிக்க வணிக மக்கள் புகார் நகரில் மிகுதியாக இருந்தனர் என்று இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார். இதில் புகார் நகர் வணிகர்களின் செல்வச் சிறப்பு குறிப்பிடப்படுகிறது. காப்பியம் முழுவதிலும் வணிகர்களின் செல்வமிகுதி, குலச் சிறப்பு, குல ஒழுக்கம், தீதில்லாத செல்வம், அரசருக்கு அடுத்த சமுதாய அந்தஸ்து, அரசரும் போற்றிப் புகழக்கூடிய செல்வச் செழிப்பு குறிப்பிடப்படுகின்றன. இக்கருத்து மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கதாகும். இதுபற்றி இன்னும் விரிவாகப் பின்னர்க் கானலாம்.

அலைகடல் சூழ்ந்த உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் அவர்களுக்கெல்லாம் வாரி வழங்குவதற்கும், உணவு கொடுத்து உபசரிப்பதற்கும் போதுமான பொருளும் செல்வமும் நிறைந்திருந்தது புகார் நகரத்தில். பல வேறு செல்வங்களும் சிறப்பும் மிக்க நாடுகளெல்லாம் ஒருசேர வந்து குவிந்திருப்பதைப் போல அவர்களின் செல்வங்கள் நிறைந்து புகார் நகரம் காட்சியளித்தது. கடல்வழியாகவும் தரை வழியாகவும் ஈட்டிய பொருள்கள் எல்லாம் அந்நகரில் நிறைந்து குவிந்திருந்தன.

மனிதன் குறிஞ்சிப்பகுதியான மலைகளில் வாழ்ந்து கொண்டிருந்த ஆதி காலத்தில் உணவு சேகரிப்பது, வேட்டையாடுவது ஆகிய தொழில்களைச் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தான். அதன் பின்னர் ஆடுமாடுகளை மேய்க்கவும், கால்நடைகளைப் பராமரிக்கவும் கற்றுக்கொண்ட மனிதன் மேய்ச்சல் நிலங்களை நோக்கிக் காலப்பயணத்தை நடத்திக்கொண்டிருந்தான். அப்போது இயற்கையில் கிடைத்த கந்தமூலாதிகள், காய், கனி, கிழங்கு, தேன், தினை முதலியவைகளுடன் பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், மாமிசம் போன்றவைகளும்