பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சிலப்பதிகாரம் மன்னனே மக்களின் உயிர்நாடி, மன்னன் முறை தவறினுல் மக்கள் நலம் அழியும் என்பதை நன்ருக யறிந்தவன். அதல்ை, மறைகா வோசை யல்ல தியாவது மணிகா வோசை கேட்பது மிலனே அடிதொழுது இறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி துாற்றுங் கோலனு மல்லன் இவனுடைய குடிகளில் யாரும் இதுவரை முறை வேண்டி இவனுடைய கொற்றக் கோயில் தூங்கிய மணியைத் ’’ துளக்கியதில்லை. அறிவறை போகியறு பொறிய கெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் என்று இவனுடைய செங்கோன் முறையைப் பழித்துத் துாற்றியதுமில்லை. சோழநாட்டிலுள்ள ஓர் அந்தணன் சேரமன்னனிடம் பலவிதமான பரிசில்கள் .ெ ப ற் று த் திரும்பிவரும்போது பாண்டிய நாட்டிலுள்ள திருத்தங்கால் என்னும் சிற்றுாரின்கண் போதிமன்றத்தில் தங்கி இளேப்பாறினன். அருகே விளேயாடிக் கொண்டிருந்த பிராமணச் சிறுவர்களே அழைத்துத் தன்னுடன் வேதம் ஒதுமாறு கூறினன். அச்சிறுவர்களில் ஒருவன் அவனுடன் ஒரு பிழையுமின்றி ஒழுங்காக ஒதின்ை. அந்தணன் மனம் மகிழ்ந்து அவனுக்குத் தன்னிடமிருந்த பொருள்களைக் கொடுத்து அனுப்பினன். வரும் வழியில் ஊர்க்காவலர்கள் இவனுக்கு ஏது இந்தப் பொருள்கள், எ ங் .ே கா திருடியிருக்கவேண்டும் என்று எண்ணி அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். மறுநாட் காலேயில் மதுரை மாநகரத்திலுள்ள கொற்றவையின் கோயில் கதவைத் திறக்க முடியவில்லை. அதை அரசனுக்கு அறிவித்தார்கள். அரசன் தன்னுடைய அரசியலில் உண்டான பழுது யாது என்று ஆராய்ந்தான். அந்தனச் சிறுவன அடைத்துவைத்திருப்பதை அறிந்தான்.