பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சிலப்பதிகாரம் அங்குள்ளவர் சாதாரணமான பெரியோர்கள் கூட அல்லர், பீடுகெழு சிறப்பிற் பெரியோர், பெருமை மிகுந்த பெரியோர். அவர்கள் யார் ? பெரியோர் என்று கூறக் கேட்டதும் கல்வி அறிவு ஒழுக்கம் நிறைந்த சான்றேர் என்று எண்ணுவோம். ஆல்ை அங்கிருந்த பெரியோர்களில் ஆடற் கூத்தியர். பூவிலே மடந்தையர், காவற்கணிகையர் என்ற மூவகைப் பரத்தையரையும் இளங்கோவடிகள் சேர்த்துளர். இவர்களே இக் காலத்தில் எவரும் பெரியோராகக் கருதார், இழிந்தோரினும் இழிந்தோராகவே கருதுவர். ஆல்ை இளங்கோவடிகளே பரத்தையரைப் பெரியோர் என்று கூறுவதாயின், ஏனையோர் அவர்களே எத்துணை உயர்வாக மதித்திருந்தனர் என்பதை ஊகித்துக்கொள்ளலாம். பரத்தமைத் தொழில் பண்பாட்டினும் பாராட்டப்பெற்ற காலம் அது ! முன் ல்ை அவர் பரத்தரை நம்பியர் என்ற சொல்லால் குறிப்பிட்டதைக் கண்டோம். இப்போது பரத்தையரைப் பெரியோர் என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காண்கின்ருேம். அவர் மீது பிழையில்லை. அவர் அக்காலத்தில் கண்ட அலங்கோலமான நாகரிகத்தை உள்ளதை உள்ள படி கூறுவதற்காகவே இந்த உயர்ந்த சொற்களே இழிந்த பொருளில் பயன்படுத்துகின் ருர் என்று தோன்றுகிறது. இளங்கோவடிகள் மூன்றுவகைப் பரத்தையரைக் கூறுகின்றனர். ஆடற்கூத்தியர் ஆடல்பாடல் அழகு மூன்றிலும் சிறந்தவர். மாதவியின் மரபினர், அரசர்களாலும் அவரையொத்த செல்வர்களாலும் விரும்பப்படுபவர். அடுத்த தரத்துச் செல்வர்களுக்கு உதவுபவர் பூவிலைமடந்தையர். அவர்கள் அற்றைப் பரிசங்கொள்வோர். அவர்கள் ஆடல்பாடல்களில் சிறந்தவராயிருக்க வேண்டுமென்றதில்லை. அழகுடைவராயிருந்தால் போதும். தாழ்ந்த மக்களுக்குப் பயன்படுபவர் காவற்கணிகையர், தொழிலாளர் போன்றவர்கள் பகல் முழுவதும் வேலை