பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சிலப்பதிகாரம்

இளங்கோ கூற்று "அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதுTஉம், 55 உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுTஉம், சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என 60

சாத்தனார் உரை "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது: அடிகள் நீரே அருளுக" என்றாற்கு.

காதைகள் முப்பது


அவர்

மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர் மனையறம் படுத்த காதையும், நடம்நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும், 65 அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும், இந்திர விழவு ஊர் எடுத்த காதையும், கடலாடு காதையும், மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதையும், தீதுஉடைக் 70 கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து நாடுகாணி காதையும், காடுகாணி காதையும், வேட்டுவ வரியும், தோட்டலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை ஊர்காணி காதையும், சீர்சால் நங்கை 75 அடைக்கலக் காதையும்,கொலைக்களக் காதையும், ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு வழக்குரை காதையும், வஞ்சின மாலையும், 80 அழற்படு காதையும், அருந்தெய்வம் தோண்றிக் கட்டுரை காதையும், மட்டுஅலர் கோதையர்