பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலைக்களக் காதை 111

'தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொண்வினைக் கொல்லண் இவன் ' எனப் பொருந்திக், 10

காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி நீ விலை யிடுதற்கு ஆதியோ' என - 'அடியேண் அறியேன்; ஆயினும், வேந்தர் முடிமுதற் கலண்கள் சமைப்பேண் யாண் எனக் கூற்றத் துாதன் கைதொழுது ஏத்தப் 115 போற்று-அரும் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன்; மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொண் குடைச்சூல் சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் பொய்த் தொழிற் கொல்லண் புரிந்துடன் நோக்கிக்; 120

"கோப்பெருந் தேவிக்கு அல்லதை, இச்சிலம்பு யாப்புறவு இல்லை' என முன் போந்து, விறன்மிகு வேந்தற்கு விளம்பி யாண்வர; எண் சிறுகுடில் அங்கண் இருமின் நீர்" எனக், கோவலன் சென்று அக் குறுமகன் இருக்கையோர் 125 தேவ கோட்டச் சிறையகம் புக்கபிண் - 'கரந்துயாண் கொண்ட கால்அணி சங்குப், பரந்து வெளிப்படா முண்னம், மண்னற்குப், புலம்பெயர் புதுவனிற் போக்குவண் யாண்' எனக், கலங்கா உள்ளம் கரந்தனண் செல்வோன் - 130

அரசன் ஆணை 'கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், பாடற் பகுதியும், பண்ணின் பயங்களும், காவலன் உள்ளம் கவர்ந்தன என்று, தன் ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத், தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக், 135 குலமுதல் தேவி கூடாது ஏக,