பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் சூழ்வரி 123

19. ஊர் சூழ்வரி

(அயன்மயங்கிசைக் கொச்சக் கலிப்பா)

முறையீடு

என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி, முறையில் அரசன்தண் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொண்று பட்டேன், படாத துயரம், படுகாலை 5 உற்றேன் உறாதது உறுவனே? ஈதொண்று கள்வனோ அல்லண் கணவன் எண் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொண்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே, காதற் கணவனைக் காண்பனே! ஈதொன்று காதற் கணவனைக் கண்டால்,அவன் வாயில் தீதறு நல்உரை கேட்பனே! ஈதொண்று தீதறு நல்உரை கேளா தொழிவேனேல், நோதக்க செய்தாள் என்று எள்ளல் ஈதுஒன்று - என்று

ஊரவர் திகைப்பு அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு, ஏங்கி, 15 மல்லல் மதுரையார் எல்லாருந் தாம் மயங்கிக் களையாத துண்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுவெண்கொல்? மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தெண்னவண் கொற்றம் சிதைந்தது இதுவெண்கொல்? 20 மண்குளிரச் செய்யும் மறவடிவேல், நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்தது இதுவெண்கொல்? செம்பொற் சிலம்பு ஒன்று கைஏந்தி நம்பொருட்டால் வம்பப் பெருதெய்வம் வந்தது இதுவெண்கொல்? ஐஅரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் 25 தெய்வம்.உற் றாள்போலும் தகையள். இதுவெண்கொல்?