பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனையறம் படுத்த காதை 13

2. மனையறம் படுத்த காதை

நிலைமண்டில ஆசிரியப்பா உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின் பரதர் மலிந்த பயன்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் 5 ஒருங்குதொக்கு அண்ண உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய ł0 கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் மயண்விதித் தண்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத் திருந்துழிக் கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை அரும்புபொதி அவிழந்த சுரும்பு இமிர்தாமரை i5 வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக் கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாதுதேர்ந்துண்டு மாதவர்வாள் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத் 20 திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டுமகிழ்வு எய்திக் காதலில் சிறந்து 25 விரைமலர் வாளியொடு வேனில் வீற் றிருக்கும் நிரைநிலை மாடத்து அரமியம் ஏறிச் சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்

கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி