பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சிலப்பதிகாரம்

காசறைக் கருவும், மாசறு நகுலமும், பிலி மஞ்ஞையும்,நாவியின் பிள்ளையும் கானக் கோழியும், தேன்மொழிக் கிள்ளையும், மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு - 55

செய்தி கூறுதல் 'ஏழ்பிறப்பு அடியேம்; வாழ்க, நிண் கொற்றம் ; கான வேங்கைக் கீழோர் காரிகை தாண்முலை இழந்து, தனித்துயர் எய்தி வானவர் போற்ற மண்னொடும் கூடி, வானவர் போற்ற, வானகம் பெற்றனள், 60 எந்நாட் டாள்கொல்? யார்மகள் கொல்லோ ? நின்நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்; பன்னூறாயிரத்து ஆண்டுவா ழியர்!" என -

சாத்தனார் விளக்கம் மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு

கணிகளி மயக்கத்துக் காதலோடு இருந்த 65 தண்தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்; 'ஒண்டொடி மாதர்க்கு உற்றதை எல்லாம், திண்திற வேந்தே! செப்பக் கேளாய், தீவினைச் சிலம்பு காரணமாக, ஆய்தொடி அரிவை கணவற்கு உற்றதும்; 70 வலம்படு தானை மண்னவண் முன்னர்ச் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்; செஞ்சிலம்பு எறிந்து, தேவி முன்னர். வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி, "அஞ்சில் ஓதி! அறிக எனப் பெயர்ந்து, 75 முதிரா முலைமுகத்து எழுந்த தீயின் மதுரை மூதுார் மாநகர் சுட்டதும்; "அரிமாண் ஏந்திய அமளிமிசை இருந்த