பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சிலப்பதிகாரம்

செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகைஅரசு நடுக்காது பயண்கெழு வைப்பிற் குடிநடுக் குறுஉம் கோலேன் ஆக" என

ஆசான் கூறுதல் 'ஆர்புனை தெரியலும், அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோர் அல்லால், 20 அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல்! நின் வஞ்சினத்து எதிரும் மண்னரும் உளரோ ? இமைய வரம்ப, நின் இகழ்ந்தோர் அல்லர் அமைக நின் சினம்' என ஆசான் கூற

வாளும் குடையும் பெயர்த்தல் ஆறிரு மதியினும் காருக அடிப்பயின்று; ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து, வெந்திறல் வேந்தே, வாழ்கநின் கொற்றம்! இருநில மருங்கின் மன்னர்எல் லாம்நின் திருமலர்த்தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்குஇது, முன்னிய திசைமேல் 30 எழுச்சிப் பாலை ஆக' என்று ஏத்த, மீளா வெண்றி வேந்தண் கேட்டு, 'வாளும் குடையும் வடதிசைப் பெயர்க்க என -

உரவுமணன் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருநர் ஆர்பபொடு முரசெழுந்து ஒலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி அடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும், வெம்பரி யானை வேந்தற்கு ஒங்கிய கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், 40