பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சிலப்பதிகாரம்

நாடக மடந்தையர் ஆடரங்கு யாங்கனும் கூடையிற் பொலிந்து கொற்ற வேந்தே! வாகை, தும்பை, மணித்தோட்டுப் போந்தையோடு 70 ஒடை யானையின் உயர்முகத்து ஒங்க, வெண்குடை நீழல்எம் வெள்வளை கவரும், கண்களி கொள்ளும் காட்சியை ஆக' என -

மாகதப் புலவரும், வைதர எரிகரும். சூதரும், நல்வளம் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வலண் ஏத்தத்; தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன் போல, வஞ்சி நீங்கித் -

நீலகிரி சேர்தல் தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் 80 வெண்தலைப் புணரியின் விளிம்புகுழ் போத, மலைமுதுகு நெளிய, நிலைநாடு அதர்பட, உலக மண்னவண் ஒருங்குஉடன் சென்றாங்கு ஆலும் புரவி, அணித்தேர்த் தானையொடு நீலகிரியின் நெடும்புறத்து இறுத்தாங்கு; 85 ஆடியில் யானையும், தேரும், மாவும், பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பின் பாடி இருக்கைப் பகல்வெய்யோன்தன் இருநில மடந்தைக்குத் திருவடி அளித்தாங்கு அருந்திறல் மாக்கள் அடியிடு ஏத்தப் 90 பெரும்பேர் அமளி ஏறிய பின்னர் -

இயங்குபடை அரவத்து ஈண்டொலி இசைப்ப, விசும்பியங்கு முனிவர், 'வியண் நிலம் ஆளும்