பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரந்தரு காதை 201

'வஞ்சி மூதுார் மணிமணி டபத்திடை நுந்தை தாள்நிழல் இருந்தோய், நின்னை "அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு " என்று 175 உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட்டுவண் தண் செல்லல் நீங்கப் பகல்செல் வாயிற் படியோர் தம்முண்,

அகலிடப் பாரம் அகல நீங்கிச் 180 சிந்தை செல்லாச் சேணிநெடுந் துரத்து, அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து' என்று, என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி, தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி தெளிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் - | 85

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்; தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்; பொய்யுரை அஞ்சுமின; புறஞ்சொல் போற்றுமின்; ஊன்ஊள்ை துறமின் உயிர்கொலை நீங்குமின் தானம் செய்ம்மின், தவம்பல தாங்குமின், 190 செய்ந்நன்றி கொல்லண்மிண் தீ நட்பு இகழ்மின் பொய்க்கரி போகண்மின் பொருள்மொழி நீங்கண்மின் அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின், பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமிண்;

அறமனை காமிண்; அல்லவை கடிமின்; கள்ளுங், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா, உளநாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது; 200 செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்; மல்லண்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-எண்