பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சிலப்பதிகாரம்

பொருள் இழந்து அவன் வாழ்ந்தபோது அவன் சோர்வைப் போக்கியவள் கண்ணகி. சிலம்பு உள என்று எடுத்துக் கொடுத்தவள்; அவள் துன்பம் கண்டு சோர்ந்தது இல்லை.

சிலம்பு உள கொள்ளும் என்று கூறும்போது நகைமுகம் காட்டுகிறாள். இடுக்கண் வருங்கால் அதனை ஏற்று நகையாடி ஏற்கும் இயல்பு அவளிடம் முழுவதும் காணப்படுகிறது.

'நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்பு உள கொள்ளும்'

எனக் கூறுகிறாள். இது சோர்வின்மைக்கு எடுத்துக்காட்டு ஆகிறது. -

வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; நடந்து களைப்பு அடைகிறாள்; மதுரை முதுர் யாது?’ என்று வினவுகிறாள், அப்பொழுதும் அவள் சோர்வு காட்டவே இல்லை. 'நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க மதுரை மூதூர் யாது?”

என்று வினவுகின்றாள்.

விருந்தினர் ஒம்பும் வாழ்க்கை இழந்த நிலையில் கோவலனின் தந்தை தாய் வந்து வினவியபோதும் அவள் அப்பொழுதும் சிரிக்கவே முயன்று இருக்கிறாள். 'வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தினர் என்று கூறுகிறாள்.

எந்தப் பெண்ணும் செய்யாத, செய்ய முடியாத புரட்சி செய்தவள் இவள்; இவளை 'வீரபத்தினி' என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுவார்.

கற்பு என்பது அடக்கம் மட்டும் அன்று, சீற்றமும் கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவள் கண்ணகி.

எனவே இவள் தெய்வக் கற்பு உடையவள் என்பதும் பெருங்குணத்துக் காதலாள் என்பதும் இவள் நற்குண நற் செயல்களால் புலப்படுகின்றன.

காவியத்தில் கண்ணகி பெரும் இடம் சிறப்பு மிக்கது; அவளைச் சுற்றி மூன்று நாடுகளின் சிறப்புகள் பின்னப்பட்டு