பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிலப்பதிகாரம்

நாட்டிய அரங்கு எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது 95 மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு. புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக் கண்ணிடை ஒருசாணி வளர்ந்தது கொண்டு நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக 100 எழுகோல் அகலத்து, எண்கோல் நீளத்து, ஒருகோல் உயரத்து. உறுப்பினது ஆகி. உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக, ஏற்ற வாயில் இரண்டுடண் பொலியத், 105 தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி, மேல்நிலை வைத்துத் துாண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து ஆங்கு ஒருமுக எழினியும், பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து ஆங்கு. 110 ஒவிய விதானத் துரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்

தலைக்கோல் வைத்தல்

பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு, #15 கண் இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய நாவல்.அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக், காவல் வெண்குடை மண்னவண் கோயில் இந்திர சிறுவண் சயந்தண் ஆக என, வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் 120 புண்ணிய நண்னிர் பொற்குடத்து ஏந்தி மண்ணிய பின்னர், மாலை அணிந்து, நலந்தரு நாளால், பொலம்பூண் ஓடை