பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சிலப்பதிகாரம்

ஐயையை அழைத்துக் கொண்டு சேரநாடு செல்கிறாள்; நெடு வேள் குன்றம் சென்று அடைகிறாள். அங்குக் கண்ணகிமுன் நின்று தெய்வம் உற்றுப் பேசுகிறாள் பாசாண்டச் சாத்தன் அவள் மீது ஏறிப் பேசுகிறான்; அடுத்துக் கண்ணகி தேவந்தி மேல் வந்து இளங்கோவடிகளோடு பேச வைக்கிறார் தேவந்தியே முன்னிருந்து பூசைவழிபாடு செய்கிறாள்.

வழியில் சந்தித்த மாங்காட்டு மறையோன், கோசிக மாமுனி, மாடலன் காவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். மாங்காட்டு மறையோன் திருமாலிடம் ஈடுபாடு கொண்டவன். திருவரங்கத்துக்கும், வேங்கடத்துக்கும் செல்லும் வேட்கை யனாக விளங்குகிறான். மதுரை செல்லும் வழிகளைக் கூறுகிறான். இட்டசித்திகள் பெறும் வழிவகைகளைக் கூறு கிறான். அவன் குறுக்கு வழியில் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்தைக் கூறக் கவுந்தி அடிகள் மறுத்து உரைக்கிறார். 'உழைப்பே உயர்வு தரும்; நல்வினைகள் ஆக்கம் தரும்' என்ற கருத்துகளை அவனுக்கு அறிவிக்கிறார். இங்கே மாங்காட்டு மறையவளைக் கொண்டு இருவேறுபட்ட தத்துவங்களைப் பேச வாய்ப்பு அமைக்கிறார் கவிஞர்.

கோசிகமாணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக்கின்றான். கோவலனைத் திருத்துகிறான். மாதவி தீதிலள்' என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான். வருந்திய மாதவிக்கு ஆறுதல் சொல்லி அவள் தந்த கடிதம் எடுத்துச் சென்று அவளுக்கு மன நிறைவை உண்டாக்குகிறான்.

அடுத்தது மாடலன்; இவள் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான். கோவலன் மாதவியோடு இருந்த கர்லத்து நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிய அவற்றைப் பேசுகிறான். ஆறுதல் கூறி அகல்கிறான். கண்ணகி மறைவு பற்றிய செய்தியைப் புகார் நகரில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டச் செய்கிறான். வடநாடு சென்று கங்கையில் நீராடச் செல்கிறான்.