பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 285

சிலாதலத்துக்கு மேல் ஒரு முழம் உயர நின்றார். அது புதுமைமிக்கதாக இருந்தது. அதன்பின் அவர் விண்ணில் உயர்ந்து வான்வழிச் சென்று மறைந்தார். ஏனைய இருவரும் அச்சாரணரைத் தொழுது வணங்கினர். தம் பிறவிப் பிணியும் தீர்க என வேண்டிக் கொண்டனர்.

அதன் பின் காவிரி நீர்த் துறையை அடுத்துப் பூவிரிசோலை ஒன்றில் தங்கினர்; அங்கு அவ்விருவரும் களைத்து அயர்ந்து இருந்தனர். அயலில் கவுந்தி அடிகள் துணை இருந்தனர்.

இளங் காதலர்கள் இவர்கள் காமனும் ரதியுமாகப் புதியவர்களுக்குக் காட்சி அளித்தனர். பரத்தை ஒருத்தியும், அவள் காதலன் வெற்றுரையாளன் ஒருவனும் அவ்வழியே வந்தனர்; அவர்கள் விழிகளில் இவர்கள் பட்டனர். இவர்கள் பேரழகில் மயங்கிய அவர்கள், 'இவர்கள் யார்?' என்று அந்த முதிய தவமாதினைக் கேட்டனர். 'மக்கள் காணிர்! மிக்க துயரமுற்றனர்; அவர்களை விட்டு விலகுவீர்' என்றார்.

'மக்கள்' என்றால் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் என்ற பொருளில் எடுத்துக் கொண்டு 'ஒரு தாய் வயிற்றுப் பிறந்தவர் காதல் செய்வதும் உண்டோ?' என்று எள்ளி நகையாடினர். இதனைத் தாங்காது கவுந்தி அடிகள் வெகுண்டு அவர்களைச் சபித்தார். எள்ளிப் பேசிய அவர்களை 'முள்ளுடைக் காட்டில்

முதுநரியாகுக' என்று சாபமிட்டார்.

அவர்கள் நரிகளாக மாறி ஊளையிட்டனர். இந்த மாற்றத்தைக் கண்டு கோவலனும் கண்ணகியும் திடுக்கிட்டனர்.

பெருமை மிக்க கோவலனும் கண்ணகியும் அஞ்சி இரக்கம் கொண்டு அவர்களுக்காகப் பரிந்து பேசினர். 'நெறியில் நீங்கியவர்கள் அறியாமையால் இழைத்த தவறுகள் இவை; அவர்கள் பிழைத்துப் போவது தக்கது; அவர்களை மன்னிக்கவும்' என்று வேண்டினர்.

"யாண்டு ஒன்று அவர்கள் உறையூரின்ை அடுத்த காட்டில் உறைவர்; பின் அவர்கள் தன் பழைய உரு பெறுவர்' என்று கூறி அவர்கள் சாபத்தை மாற்றினார். அதன்பின் இவர்கள் தாம் தங்கி இருந்த சோலையை விட்டுச் சோழர் தம்