பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 303

ஒலிப்புச் செய்தன. பொய்கையில் உள்ள தாமரைகள் கதிரவன் ஒளிபட்டுத் தம் இதழ்கள் விரித்தன; ஊர்மக்கள் துயில் எழுந்து சுருசுருப்பாக இயங்கினர்.

கோயில்களில் முரசங்கள் ஒலித்தன; சிவன் திருக்கோயில், கருடக் கொடியை உயர்த்தியவன் ஆகிய திருமால் கோயில், மேழிப்படை தாங்கிய பலராமன் கோயில், சேவலைக் கொடியாக உடைய முருகன் கோயில், அறவோர் பள்ளிகள், வீரச்செயல் மிக்க அரசன் அரண்மனை இங்கு எல்லாம் சங்குகள் முழங்கின. அவற்றோடு முரசங்களும் ஒலித்தன.

கவுந்தி அடிகள் அற உரைகள்

கோவலன் கவுந்தியடிகளை வணங்கி எழுந்து பேசத் தொடங்கினான். சென்ற காலத்துக் கேடுகளை ஏடுகள் திறந்து படிப்பதுபோலக் கூறத் தொடங்கினான். 'நெறிகெட்ட வழிகளில் சென்று என் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டேன்; நறுமலர் மேனியளாகிய கண்ணகியைப் புதிய தேயத்துக்கு அழைத்து வந்தேன்; கடும் வழிகளில் கால்கடுக்க நடக்க வைத்தேன்; சிறுமை அடைந்தேன்; பெருமை இழந்தேன்” என்று தன் நிலையை எடுத்து உரைத்தான்.

'இது கடந்த காலம்; அடுத்து நான் எடுக்கும் முயற்சி; அதற்காக ஊர் உள் சென்று உறவினர் அவர்களைச் சந்திப்பேன். வணிகர்கள் எனக்கு உறவினர்கள்; அவர்களைச் சந்திக்கும் வரை கண்ணகிக்குக் காப்பாக இருந்து உதவ வேண்டுகிறேன்; உங்களிடம் விட்டுச் சென்றால் அவளுக்கு எந்த இடர்ப்பாடும் நேராது' என்று கூறினான். ஆறுதல் கூறி அவனை அனுப்பிவைக்க நினைத்துக் கவுந்தி அடிகள் அறத்தின் மேம்பாடு குறித்து அறிவுரை தந்தார். 'விதி வலிது’ என்று அவர் தாம் நம்பும் அறக்கோட்பாட்டை அவனுக்கு அறிவுறுத்தினார்.

'அறம் அறிந்த அறிஞர்கள் பலமுறை எடுத்துச் சொன்னாலும் நீதிகளைக் கேட்டு இந்த மாநிலத்தில் மாந்தர் நடந்து கொள்வது இல்லை; அது இந்த உலகத்து இயற்கை; தீமைபயக்கும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் பொழுது உறுதி குலைகின்றனர். தளர்ச்சி அடைகின்றனர்.”

'கற்று அறிந்தவர்கள் கலங்குவது இல்லை. அவை வினைப்பயன் என்று விவேகம் காட்டுவர்; துறவிகளுக்குத் துயர்