பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 ஆய்ச்சியர் குரவை

குரவையாடுதல்

அக்கூத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் எழுவர்; அவர்கள் வீரம் மிக்க இளைஞரையே விரும்பி மணக்கும் உறுதிப்பாடு கொண்டவர்கள். அவர்களுள் ஒருத்தி, 'காரி என்ற எருதின் சீற்றத்தை அடக்கியவனையே மணப்பேன்' என்றாள். அவ் எருது கருநிறம் பெற்று விளங்கியதால் 'காரி எனப்பட்டது. அவ்வாறே ஏனையவரும் வெவ்வேறுநிறம் உடைய எருது களை அடக்குவோரைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர். நெற்றியில் சிவந்த சுட்டியுடையது ஒர் எருது; மற்றொன்று வலிமை மிக்க இளளருது; நுண்ணிய புள்ளிகளையுடைய எருது மற்றொன்று. பொன் புள்ளிகள் உடையது மற்றொன்று; வெற்றி மிக்க இளம் எருது மற்றொன்று; தூய வெள்ளை நிறம் உடையது மற்றொன்று. இவ்வாறு தனித்தனி எருதுகளைக் குறிப்பிட்டு அவற்றை அடக்குபவருக்கே ஆயர்மகள் உரியள் என்று வீரம் பேசினர். -

இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வோர் எருதை வளர்த்தவர்கள். இவர்களே இக்குரவையில் பங்கு கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயர் இட்டு ஆட்டத்தில் பங்கு கொள்ளச் செய்தனர். பண்கள் ஏழு; அவற்றை அவர்களுக்குப் பெயர்களாக இட்டனர். அவை முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம்.

இவ் ஆய மகளிருள் மூவர் கண்ணனாகவும், பலராம னாகவும், நப்பின்னையாகவும் நடித்தனர். மற்றவர்கள் சுற்றி நின்றனர். மாயவன் கழுத்தில் நப்பின்னை துளப மாலையைச் சூட்டினாள். 'திருமகளைப் போல் இவள் பேரழகினள்' என்று மற்றவர்கள் பாரட்டினர்; நப்பின்னை கண்ணனுக்கு மாலை யிட்டு அவனோடு இணைந்து ஆட ஏனைய மகளிர் மாயவனைப் பாடினர்.

அப்பாடலுக்கு, 'முல்லைத் தீம்பாணி என்று பெயர் வழங்கினர்.

"கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு விளவின் கனியை உதிர்த்தவன்; அவன் இன்று நம் பசுக்கூட்டத்தில் வருவான்;