பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சிலப்பதிகாரம்

போதுபுறங் கொடுத்துப் போகிய செங்கடை விருந்தின் தீர்ந்திலது ஆயின், யாவதும் மருந்தும் தரும்கொல், இம் மாநில வரைப்பு' எனக், கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்

இருவர் நிலை

உள்ளக நறுந்தாது உறைப்ப, மீது அழிந்து, 235 கள்உக நடுங்கும் கழுநீர் போலக் கண்ணகி கருங்கனும், மாதவி செங்கனும், உள்நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன; எண்ணுமுறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன விண்ணவர் கோமாண் விழவுநாள் அகத்து எண். 240

6. கடலாடு காதை

நிலை மண்டில ஆசிரியப்பா

விஞ்சையன் கூற்று வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக், கள் அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக் கருங்கயல் நெடுங்கண் காதலி தண்னொடு விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் தென்திசை மருங்கின்ஒர் செழும்பதி தன்னுள் 5 இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இது எனக் 'கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக் கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மண்னற்குத் தொலைந்தனர் ஆகி, நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட 10 வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும்; அமரா பதிகாத்து, அமரனிற் பெற்றுத் தமரின் தந்து, தகைசால் சிறப்பிற் - 15 பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த