பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சிலப்பதிகாரம்

மறஉரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத், தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதிர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேண் ஆகலின் போதுவல் யானும்; போதுமின்' என்ற, 60

காவுந்தி ஐயைக் கைதொழுது, ஏத்தி அடிகள் நீரே அருளுதிர் ஆயின், இத் தொடிவளைத் தோளி துயர்தீர்த் தேன்' எனக் - கோவலன் காணாய் ; கொண்ட இந்நெறிக்கு ஏதம் தருவன யாங்கும்; பல கேண்மோ ; 65

மதுரை செல்வழிகள் வெயில் நிறம் பெறாஅ மெல்லியல் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசேர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் 70

கையறு துன்பம் காட்டினும் காட்டும், உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பரற்பகை உறுக்கும் ; 75

கயல்நெடுங் கண்ணி காதற் கேள்வ ! வயல் உழைப் படர்குவம் எனினே, ஆங்குப் பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஒட்டி நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிண், 80

கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண், கரும்பில் தொகுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் துளநீர் கலக்கும்;