பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சிலப்பதிகாரம்

திமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக், காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க 230 'எள்ளுநர் போலும் இவர், எண்பூங் கோதையை ; முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக' எனக் கவுந்தி இட்டது தவந்தரு சாபம், கட்டியது ஆகலின், பட்டதை அறியார்; குறுநீர் நெடுங்குரல் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி, 'நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்; அறியாமை என்று அறியல் வேண்டும்; செய்தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு

உய்திக் காலம் உரையிரோ ? என - 240 அறியா மையின் இன்று இழிபிறப்பு உற்றோர் உறையூர் நொச்சி ஒருபடை ஒதுங்கிப் பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்' எனச் சாபவிடை செய்து, தவம்பெரும் சிறப்பின் 245 காவுந்தி ஐயையும், தேவியும், கணவனும், முறஞ்செவி வாரணம் முண்சமம் முருக்கிய புறஞ்செவி வாரணம் புக்கனர் புரிந்து - எண்.

கட்டுரை முடியுடை வேந்தர் மூவருள்ளும் தொடி விளங்கு தடக்கைச் சோழர்குலத்து உதித்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம் பழவிறல் மூதுார்ப் பண்புமேம்படுதலும் விழவுமலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5

ஒடியா இண்பத்து அவர் உறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும், அவர்-தம் தெய்வக் காவிரித் தீதுசீர் சிறப்பும், பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும், அரங்கும், ஆடலும், துாக்கும், வரியும் 10