பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிலப்பதிகாரம்

கணிகையர் வாழ்க்கை கடையே போண்ம்" எனச். செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெண்முத்து உதிர்த்து, வெண்நிலாத் திகழும், தண்முத்து ஒருகாழ் தன்கையாற் பரிந்து துணிஉற்று எண்னையும் துறந்தனள்; ஆதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்பச். சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்;

பாத்து-அரும் பண்ப ! நின் பணிமொழி யாது !" என -

"மயக்குந் தெய்வம்இவ் வண்காட்டு உண்டு' என வியத்தகு மறையோண் விளம்பினண்; ஆதலின், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் அஞ்சில் ஒதியை அறிகுவண் யாண் எனக்கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம்; ஆதலின், வன-சாரணியாண், மயக்கஞ் செய்தேன் ; புனமயிற் சாயற்கும், புண்ணிய முதல்விக்கும், என்திறம் உரையாது ஏகு' என்று ஏகத்; தாமரைப் பாசடைத் தண்ணிர் கொணர்ந்து, ஆங்கு அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து -

ஐயை கோட்டம் அடைதல் மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் 'தீதியல் காணஞ் செலவு அரிது என்று, கோவலன்-தண்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத்து ஆட்டியும் மயங்குஅதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவியபூம்பொழில் விளங்கிய இருக்கை,

ஆரிடை அத்தத்து இயங்குநர் அல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர்

185

190

195

200

205

210