பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் காண் காதை

93

இடைஇருள் யாமத்து இட்டு நீக்கியது வல்வினை யன்றோ மடந்தை தண் பிழையெனச் சொல்லலும் உண்டேல், சொல்லா யோநீ! அனையையும் அல்லை; ஆய்இழை-தண்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே! வருந்தாது ஏ.கி, மன்னவன் கூடல், பொருந்துழி அறிந்து போதுஈங்கு என்றலும்

நகர் அடைதல் இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில் பெருங்ரை யானை இனநிரை பெயரும் சுரங்கை வீதி மருங்கிற் போகிக்கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு ஆயிரம் கண்ணோண் அருங்கலச் செப்பு வாய்திறந் தண்ன மதிலக வரைப்பில்

மகளிர் புனலாட்டு! குடகாற்று எறிந்து கொடிநுடங்கு மறுகின் கடைகழி மகளிர் காதல் அம் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்துறை விரிபூந் துருத்தி வெண்மணல் அடைகரை ஓங்குநீர் மாடமொடு நாவாய் இயக்கிப் பூம்புணை தழி இப் புனல் ஆட்டு அமர்ந்து

பொழிலாட்டு தண்நறு முல்லையும், தாழ்நீர்க் குவளையும், கண் அவிழ் நெய்தலும், கதுப்புற அடைச்சி, வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு. தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடிப், பொற்கொடி மூதுார்ப் பொழில் ஆட்டு அமர்ந்து ஆங்கு

55

60

60

70

75