உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நிமித்திகன் குறும்புச் சிரிப்புடன் எழு உண்மைக் காது!...அவர் ஆரூடங்கேட்டுக் கலங்காது!... கிறான்] நிமித்திகன்: வாழ்க செங்குட்டுவன்! வாழ்க நிமித்திகன்: ஊழ்வினையை மாற்ற இயலாது. எதிர்கால மன்னர் இளங்கோ!! சேரலாதன்: என்ன? நிமித்திகரே! என்ன கூறுகிறீர்?.... நிமித்திகன்: நான் கூறவில்லை அரசே! ஊழ் வினை அப்படித்தான் கூறுகிறது! முடிபுனையும் உரிமை மூத்தமகன் செங்குட்டுவனுக்குத் தான் உண்டெனினும்... விதிபுனையும் கதையோ வேறாக இருக்கிறது! இளையவன் இளங்கோ தான் சேர மண்டிலத்தை ஆளுவானாம்... சேரலாதன்: [வியப்புடன்] என்ன?... அவையோர்: மூத்தவனிருக்க இளையவனுக் குப் பட்டமா? (செங்குட்டுவன் முகம் மாறுகிறது. அதை இளங்கோ கவனிக்காமல் இல்லை.] இளங்: இல்லை! இல்லை!! என் அண்ணனே ஆளப் பிறந்தவர்! சேரலாதன்: இளங்கோ! நிமித்திகர் வாக்குப் பொய்க்காது! இளங்: பொய்க் காது படைத்தவர்களுக்கு நிமித்திகர் வாக்குப் பொய்க்காது!... இது இளங்கோ!... இளங்: ஏன் இயலாது? "ஊழையும் உப் பக்கம் காண்குவர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" எனக் குறள் கூறும் கருத்தை உண்மையாக்குகிறேன்! நீர் கூறும் விதியை மதியால் வெல்லுகிறேன்! காடாள நிமித்திகன்: மூத்தவன் இராமன் வேண்டும்; இளையவன் பரதன் நாடாள வேண்டும் என்ற விதியை யாராவது மாற்ற முடிந்ததா? இளங்: பரதனும்

ஆளவில்லை; இராமனும் ஆளவில்லை; பதினான்கு வருடம் பாதரட்சை அல்லவா நாடாண்டது! நிமித்திகரே, பழைய இதிகாசங்களைக்காட்டி விதியை நிலைநிறுத்த எண்ணாதீர்! இதோ... நான் படைக்கிறேன் புதிய இதிகாசம்! உமது ஆரூடத்தை அறிவால் வெல்லுகிறேன்... அண்ணனையே அரசுக்குரியவராக்குகிறேன்! ஏற்றுக் கொள் ளும் நிமித்திகரே எனது அறைகூவலை! உமது கூற்று தூள்! தூள்!! தூளாகப் போகிறது பாரும்!... வருகிறேன்!... [இளங்கோ மண்டபத்தை விட்டு வெளி யேறுகிறான். அவை, வியப்பில் ஆழ்கிறது. அரசரும் அரசியும் ஒருவருக்கொருவர் பார்த் துக்கொள்கிறார்கள், வேதனையோடு!]