உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கண் கலங்கக் கூறிக் கொண்டிருந் தாள் ... திடீரென ஒருநாள் அவளைக் காண வில்லை...எங்கு போனாளோ, தெரியாது. கணவன்தான், இறந்தவன் திரும்பி வந்தானோ...அல்லது அவள்தான் அவ னோடு போய்விட்டாளோ... தெரியாது எங்க களுக்கு! அவளைப்போல ஒரு பெண்ணை இது வரை நாங்கள் கண்டதில்லை.... செங்கு: கண்ணகி..! சாத்த: ஆமாம்! கற்புக்கரசி கண்ணகி! நல்ல நேரத்தில் மலைமக்கள் நினைவூட்டினார் கள்... நான் அவள் கதையைச் சொல்லு கிறேன். இளங்கோவடிகள் அதை ஒரு காவியமாக எழுதட்டும்? கண்ணகி காவியம் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பெருமை களைச் சொல்லும் ஒப்பற்ற கருவூலமாக அமையட்டும்...! முடியுடை மூவேந்தர்க்கும் இக்கதை உரியதாகையால் இளங்கோ வடிகள் இதனை எழுதுவதே பொருத்தமாகும். செங்கு: சொல்லுங்கள் புலவரே! இளங்கோ அதற்கு இலக்கியம் படைப்பான் ! என்ன தம்பி! சரிதானே? இளங் சரியண்ணா! சாத்தனாரே சொல்லுங்கள், கண்ணகி கதையை... (சாத்தனார் அங்குள்ள புலிக்குட்டியைத் தடவிக் கொடுத்தவாறு கதையைத் துவங்கு கிறார்...] [இளங்கோவடிகள் எழுதத் தொடங்கு கிறார்.] [புலிக் கொடி பறக்கிறது. சாத்தனாரின் குரலுடன் காட்சி மாறுகிறது.... பூம்புகார்ப் பட்டினக் காட்சிகள் துவங்கு கின்றன.) சாத்த: காவிரி யாறும், கடலும் முத்தமிட்டுக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள அழகுத் திருநகராம் பூம்புகார் பட்டினம்! புலிக் கொடியின்கீழ் ஆட்சி நடாத்தும் சோழப் பேரரசின் தனிப்பெருந் தலைநகரம்!...