உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் - காற்சிலம்பின் கதை! சிலப்பதிகாரம் - கருத்தைக் கவரத்தக்க பெயர் ! சிலப்பதிகாரம் - இனிய சந்தமும் இன்னிசையும் - கோலோச்சிக் கொண்டுள்ளன. சிலம்பில் - விலை மதிப்பில்லாத - மணிகள் - நிரம்பியிருக்கும். அதுபோல ........ இயைந்து அதனுள்ளே சிலப்பதிகாரம் எனும் இம்முத்தமிழ்க் காப்பியத்தில் இருப்பது - இழைவது இதயத்தைத் தொடுவது வெறும் கதை மட்டுமல்ல; பழம்பெரும் தமிழகத்தின் உணர்வும் ஆகும். இக்காப்பியக்கதை - கட்டுக்கோப்பில் - கருத்தைக் கவரும் தரத்தில் இமய உயர்வில் இருக்கிறது. இக்காப்பியம் காட்டும் பெண்டிர் இருவகையினர்: ஒருத்தி - கற்புக்கரசி கண்ணகி ! இன்னொருத்தி - கொழுநன் காலில் கலைகளைப் படைத்த மாதவி! கண்ணகி கணவன் தன்னைவிட்டுப் பிரிந்தமையால் கடுந்துயரும் - கண்ணீரும், பெருமூச்சும், புலம்பலும் கொண்டவள்! மாதவி-பண்புடைப்பாவை - பேரழகுப்பேழை - இன்பம் கொழிக்கும் இயல்புடையாள் - இனிய காதலைக் கலையாக்கிய பெருந்தலைவி - நெஞ்சத்தூய்மையும் நேர்மையும் நிதியெனப் பெற்றவள். பொருளாசையோ - பொருந்தா நெறியோ - பொய் நேசமோ கொண்டவள் அல்லள். கோவலனுக்கென இதய ஆழத்தோடும் - நெஞ்சின் கதக தப்போடும் தன்னைத்தானே துயரக் கடலில் தள்ளிக்கொண்டவள். தன் இன்னுயிரையே அவனுக்கென அளித்தவள்! கோவலனும் மலைமலையான பொருளைத் தண்ணீராய்ச் செலவிடும் சாதாரண தரத்தைச் சார்ந்தவனல்ல; மதிப்பும் மதியும் மிக்க இளைஞன். சமுதாயத்தில் உயர்மதிப்புப் பெறும் இடம்பெற்றோன். பெருவணிகர் குலத்துதித்தோன். இக்காவியம் காட்டும் கோவலனும் மாதவியும் கண்ட இன்பக்காதல் வாழ்வும் - அவர்கள் இசைத்த இன்னிசையும், அவர்கள் ரசித்த நடனமும், ஏதோ நெறி கெட்ட இளைஞனும், வெறுக்கத்தக்க மங்கையும் வாழ்ந்த வாழ்வு அல்ல! அது இரு காதலரின் வாழ்க்கை! அந்தக் காதல் வாழ்வின் காட்சி - கொடுமைநிறை முதலை தன் இரையை விழுங்கும் காட்சி அல்ல ! சிந்தை கவரும் வெண்ணிற அன்னம், சிந்துபாடும் சிற்றாற்றில் இசைமுழங்க நீந்தி மகிழும் காட்சிக்கு ஒப்பானது! iii