உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.கிழவர்: அப்படிச் சொல்! அப்படிச் கி.கிழவர்: அப்படிச் வரத்தில் என்ன செய்ய சொல்!! சுயம் வேண்டும்? நான் தயார்!.... [எல்லோரும் சிரிப்பு ] கூனி : அரசரால் மாதவிக்குப் பரிசாக அளிக் கப்பட்ட இந்த மாலையை ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து வாங்குகிறவர்- அவளுக்குக் கணவனாகலாம்!... (அவையில் ஒருவருக்கொருவர் "ஆயிரத் தெட்டுப் பொன்! ஏ, அப்பா!" எனப் பெரு மூச்சு விடுகின்றனர்.] கி.கிழவர்: இதோ; ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்! (மேடையருகே ஓடுகிறான். சித்ராபதியும், கூனியும். ஒருவருக் கொருவர் மகிழ்ச்சி!] மாதவி வசந்த மாலை? 8 ....!...! [தோழியிடம் திரும்பி வந்து] வசந்த [திகைப்புடன்] மாதவி!... [மேடைக்கு வந்த கிழவர் பொன் முடிப்பை அவிழ்த்துக் கொட்டிய வாறு] கி.கிழவர்: ம்! தமிழ் நாட்டு முத்து வாங்கக் கொண்டு வந்தேன். ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்! இந்தா-இது இந்த மாலைக்காக அல்ல! மாதவிக்காக! கொடு மாலையை.... [மாதவி, திடுமென கூனியின் கையிலுள்ள மாலையைப் பிடுங்கிக்கொண்டு சித்ராபதியைத் தழுவியவாறு ‘“அம்மா” என விம்முகிறாள்.] சித்ரா: மாதவி!...என்ன இது குழந்தை மாதிரி! கொடு மாலையை!... வசந்த : ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னுக் காக..இந்த நூற்று எட்டு வயதுக் கிழவனை மாதவி மணப்பதா?... கி.கிழவர்: யாருக்கு நூற்று எட்டு? ஆளைப் பார் இளவெட்டு! எனக்கு அறுபத்தெட்டு முடிந்து நாள் எட்டு தான் ஆகிறது ஞாபகம் வைத்துக்கொள்!... [கோவலனும் கண்ணகியும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளுதல்.] வசந்த :அந்தோ! இந்தச் சபையில் ஆயிரத் தெட்டு பொன் தரக்கூடிய வாலிபர்கள் யாருமே இல்லையா?...கிளியை வளர்த்து இந்தக் கிழட்டுப் பூனை கையிலே கொடுப் பதா?... நான் சொல்வதைக் கேளுங்கள்! மாதவி யின் சுயம்வரத்தை ஒத்தி வைத்து விடலாம். சித்ரா: உஸ்! பேசாமலிரு! இந்தச் சித்ராபதி வாக்குத் தவறமாட்டாள்! மாதவி திருமணம் செய்து கொள்ளத் தான் வேண்டும். வசந்த : அதை யார் மறுத்தார்கள்! ஆனால் யாரை?... சித்ரா : இந்த மாலை வாங்கியவரை! வசந்த : அப்படியா னால், இவர் இந்த மாலையை வாங்காமல் நான் பார்த்துக்கொள் கிறேன்! ஐயா பெரிய வரே!... தயவு செய்து எங்கள் மாதவியைக் காப்பாற்றுங்கள்!... கி. கிழவர்: காப்பாற்று கிறேன் - வாழ்க்கை முழுதும் அவளை வைத்து நான் காப் பாற்றுகிறேன்; அதற்கு என்னிடமிருக்கிற பொருள் போதும்! வசந்த : பொருள் போதும்! ஆனால் வயது போதாதே தங்களுக்கு! இன்னும் நாலு வருடமோ, ஐந்து வருடமோ?

சித்ரா : பேசாதே; வசந்தமாலை! மாதவி! வீண் பிடிவாதம் செய்யாதே! கொடுத்துவிடு மாலையை! ஒருவனையே மணந்து வாழ்வேன் என்று நீதான் சொன்னாய்; இப்போது நீயே என்னை அவமானப்படுத்துகிறாய்... 15