உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்: அம்மா!... மாசாத்: ம்! இதோ போகிறேன்; இரண்டி லொன்று பார்த்துவிட்டு வருகிறேன்... (உள்ளிருந்து சிரித்துக்கொண்டே வந்த வாறு] கோவ: அப்பா! எங்கேயப்பா போகிறீர்கள்? மாசாத் : யார்! நீயா?...கோவலா! நீ இங்கே தானா இருக்கிறாய்? கோவ: ஏன் வேறு எங்கே போகவேண்டும்? [கண்ணகியிடம் ] மாசாத்: என்னம்மா இது; அப்படியானால் நான் கேள்விப்பட்டதெல்லாம் பொய்தானா? கோவ: கேள்விப்பட்டது உண்மைதான், ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னுக்கு மாலை வாங்கிய வரையில்! கிளியைக் கிழவனிட மிருந்து காப்பாற்றிய படலம், அவ்வளவு தா ன்! அதற்கு மேல் நீங்கள் கேள்விப்பட் டிருந்தால் அது ஏதோ கோள் சொல்லும் கோட்டான்களின் வேலை!... தாய் : கண்ணகி! கண் : நீங்கள் எல்லோருந்தான் என்னைப் பேச விடாமல் வளைத்து விட்டீர்களே; வருத்தம் தெரிவிக்க!... மாநாய்கன்: அப்படியானால்.... கோவ: காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இல்லறம் இனிது நடைபெறு கிறது மாமா! கடைசி வரையில் கண்ணகி கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கடமை எனக்கிருக்கிறது!... மாசாத்: அ வசரப்பட்டு விட்டோம் கோவலா!... இந்த நல்ல மகனைப் பெறுவ தற்கு இவன் தந்தை என்ன பாக்கியம் செய் தானோ என்று பார் முழுதும் என்னைப் பாராட்டிப் புகழும். அது போதும் மகனே, எனக்கு! [தழுவிக் கொள்கிறார் கோவலனை] கண்ணகியின் தாய் : கண்ணகி! இப்படி யொரு நல்ல குடும்பத்திற்கு மருமகளாகும் பாக்கியம் உன்னைத் தவிர வேறு யாருக் கம்மா கிடைக்கும்? (கண்ணகி ஆனந்தக் கண்ணீர்]