உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மாசாத்: சரியம்மா, கண்ணகி!... அவன் திருந்தி... திரும்பி வரும்வரையில் தனியாக இருப்பானேன்? எங்கள் வீட்டுக்கு வந்து விடு!... கண் : மாமா, எங்களைத் தனி வாழ்வு நடத்த ஏற்பாடு செய்தீர்கள்; தமிழர் வழக்கப்படி!... அதில் நான் தோல்வி கண்டால் அல்லவா இந்த வீட்டை விட்டு அகலவேண்டும்! அவர் என்னை நெருப்பில் நிற்கவிட்டுப் போனாலும், அவர் வரும் வரை அங்கேயே நின்று கொண்டிருப்பேன்.... மாசரத் மாநாய்கன் மகளே !... உன் மன உறுதியைப் பாராட்டுகிறேன். தமிழ்க் குலத் தின் பெருமைக்கு நீ யொரு சான்று! உன் இருதயத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் ஆறாத துயரம் விரைவில் நீங்க ஆசி கூறு கிறேன்... வருகிறேனம்மா கண் : சரி மாமா...... அத்தை: கண்ணகி.. வரட்டுமா!. தேவந்தி... என் கண்ணகியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் !... தேவை ஏதாவது இருந்தால் என் னிடம் நீயாவது வாம்மா !... [தேவந்தி தலையசைத்தல்] கண்ணகி, வருகிறேனம்மா!... கண்: சரி அத்தை! கவலைப்படாமல் போய் வாருங்கள்!..... [அவர்கள் போகிறார்கள். கண்ணகி கண் கலங்கியவாறு சிரித்த முகத்தோடு வழி அனுப்பு கிறாள்...] (கண்ணகி அமர்ந்திருக்கிறாள். அப்போது மாநாய்கனும் கண்ணகியின் தாயும் வருகின்ற னர்] மாநாய்கன்: கண்ணகி! கண் : அப்பா! அம்மா! வாருங்கள்! மாநாய்: என்னம்மா இது...புருஷனையும் பறி கொடுத்துப் பொருளையும் பறிகொடுக்க ஆரம் பித்துவிட்டாயா? கண்: பொருள் !... யார் சம்பாதித்த பொருள்! திரை கடலோடி அவர் தேடிய திரவியம் தானே எல்லாம்! அவர் திருப்திக்காகச் செலவிடுவதில் என்னப்பா தவறு ?... மாநாய்: ஐஸ்வரியம்.. அள்ள அள்ளக் குறை யாத ஆழ்கடல் நீரல்ல!... மெள்ள மெள்ளக் கரைந்துவிடும் என்பதை மறவாதே மகளே! கண்: செல்வம் குறைந்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்- என் சிந்தை கவர்ந்த அத்தா னுக்கு என்மீது அன்பு குறைந்துவிட்டால்... பிறகு... மாநாய் அன்பு!... அவனுக்கு உன்மீது அன்பு 1... அன்பு இருந்தால், அவன் ஏன் கணிகை யொருத்தியின் காலடியில் கிடக் கிறான் ? மா தவியாம் மாபாதகி யொருத்தி யல்லவா அவனுக்கு மகாராணியாகிவிட் டாள் !... கண்: மாதவியை இகழாதீர்கள்... அவள் என்னைவிட உயர்ந்தவள். அழகில் மட்டு மல்ல; அன்பிலுங்கூட, அவரைப் பிரிந்து நான் உயிரோடு இருக்கிறேன்! அவள் அவரைப் பிரிந்தால் அரைக் கணமும் உயிர் தரிக்கமாட்டாள்!...அதன்காரணமாகத்தான் அத்தான்கூட அங்கேயே தங்கிவிட்டார்... என்மீது அவருக்கு அன்பில்லாமல் இல்லை; கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கல்மனம் கண்ணகிக்கு உண்டு ! மாதவியின் மனமோ உடனே வாடும் மலர் போன்றது என்பதை அவர் நன்றாக அறிவார் அப்பா !... மாநாய்: அய்யோ...குணக் குன்றையல்லவா என் குலக் கொடியாகப் பெற்றிருக்கிறேன். கோவலா? இந்தக் குளிர் பூங்கொத்தைக் கொடு நெருப்பில் வீசிவிட்டுப் போகலாமா நீ?... (கண்ணகி கண்களில் நீர் வழிகிறது] கண்: கவலைப்படாதீர்கள் அப்பா! தாய் தங்கமே! உன்னை நாங்கள் தேற்ற வந்தால் நீ எங்களைத் தேற்றுகிறாயா? பதுமைபோல் உன்னைப் பரிதவிக்க விட்டு விட்டு, அந்தப்பாவி...... [கோபமாக] கண்: அம்மா! நிதானித்துப் பேசுங்கள். இப்படி யெல்லாம் அவரைச் சபிப்பதாயும், திட்டுவதாயு மிருந்தால் இனிமேல் யாரும் இங்கே வராதீர்கள்....யாரும் இங்கே வரா தீர்கள்!... யாரும் இங்கே வராதீர்கள் !... [விம்மி விம்மி அழுகிறாள்.]