உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் எதற்கெடுத்தாலும் கோபம் வருமோ என்னவோ?... [வேறு பக்கம் போகிறான். மாதவி, பின் சென்று] மாதவி: இது மாதிரி நேரம் என்றீர்களே; எது மாதிரி நேரம்?... கோவ: அதுதான்; நடனமாடினால்... களைப்பு வருகிறதே; அதுமாதிரி நேரம்.. மாதவி: ஏன்...களைப்பு வருகிறது?... கோவ: ஓகோ...மறுபடியும் விட்ட இடத் துக்கே வந்துவிட்டாயா?... மாதவி: நீங்கள் சொல்ல மாட்டீர்களே சரி!. [போகிறாள்] கோவ: நில்! மாதாவி!... மாதாவி!... மாதவி: என்ன!...மா தா வியா?.... கோவ: ஆமாம். மா ...தா...வி... தான்!இனி மேல் - நீ... மாதாவிதான்!... மாதா...மாதா.. நீ... மாதா... நான்... பிதா! அதனால்தான் உன்னால் அதிக நேரம் நடனமாட முடிய வில்லை. மாதவி: போங்கள்... [வெட்கம்] கோவ: பார்த்தாயா...பார்த்தாயா!. அதனால் தான் சொல்லமாட்டேன் என்றேன்.. மாதவி: அத்தான்!... கோவ மா தவி!... மாது கையில் குழந்தையுடன் தலைவிரி கோல மாக, காவிரி யாற்றைப் பார்த்து நிற்கிறாள்; ஓலமிட்டபடி!...] [அருகே வந்து] கோவ: அம்மையே!.. தாங்கள் யார்?... ளுக்கு என்ன நேரிட்டது?... பிராமண மாது : தங்க அய்யா...அந்தணர் ஒருவ ரின் துணைவி நான். நான் அறியாமற் செய்த ஒரு குற்றத்தை மன்னிக்க மனமின்றி என் கணவர் என்னை வெறுத்துப் பிரிந்து விட்டார்.... கோவ: அப்படி யென்ன குற்றம்?.. பிராமண மாது: என் கணவர் ஒரு கீரிப் பிள்ளை வளர்த்து வந்தார்!...ஒரு நாள் அவர் ஊரில் இல்லை...நீராடுவதற்குக் குளத்திற்குச் சென்ற நான் குழந்தைக்குக் கீரிப்பிள் ளை யைக் காவல் வைத்துவிட்டுச் சென்றேன். அப்போது குழந்தையைக் கடிக்க ஒரு பாம்பு வரவே, அதைக் கீரி கொன்று...அந்த ரத்தத் தோடு வெளியே ஓடிவந்தது... குளத்தி லிருந்து திரும்பிய நான், குழந்தையைத்தான் கீரிப்பிள்ளை கொன்றுவிட்டதென்று தவறாகக் கருதி, அதன்மீது குடத்தை விசிக் கொன்று விட்டேன்.... இந்தக் குற்றத்தைப் பொறுக்க மாட்டாமல்... என் கணவர்... என்னையும் குழந்தையையும் தவிக்க விட்டு வெளிக் கிளம்பி விட்டார்.... [சோகக் குரல் கேட்கவே, திடுக்கிட்டுத் கோவ: த்சு...த்சு...அப்படியா? திரும்புதல்] குரல்: பகவானே! என்னை ஏன் இந்தக் கதிக்கு ஆளாக்கினாய்?... கணவனில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?...அய்யோ... அய்யோ...இந்தக் கோலத்தில் என்னைக் கைவிட்டுப் போக அவர் மனம் எப்படித் துணிந்தது?... கடவுளே!... நீயாவது என் கணவரின் கல் மனத்தை மாற்றி நல்வழியில் திரும்பச் செய்ய அருள்புரிய மாட்டாயா? அய்யோ...யாரும் எனக்கு அபயம் அளிக்கமாட்டார்களா? இந்த ஏழையின் குரல்,என் கணவரின் இருதயத்தைத் தொடாவிட்டாலும்; இறைவா! உன் இருதயத்தையுமா தொட வில்லை?... [கோவலனும் மாதவியும் வியப்போடு குரல் வந்த பக்கம் வருகிறார்கள். ஒரு பிராமண பிராமண மாது: அதோ... அதோ... படகில் அவர்தான் போய்க்கொண்டிருக்கிறார்.... அய்யா...தயவு செய்து படகை நிறுத்தச் சொல்லுங்கள்! .. கோவ: ஏ... படகோட்டி!. படகை நிறுத்து!.. நிறுத்து!... [சத்தமிட்டு] கரைக்குக் கொண்டுவா!... [படகு கரைக்கு வருகிறது) (பட கிடம், பார்ப்பனமாது பிள்ளையுடன் ஓடி] பிராமணமாது என்னை மன் னித்து விடுங்கள் ; குழந்தை முகத்திற்காகவாவது திரும்பி விடுங்கள்!... அந்தணர்; சே!... முடியாது!... என்னை யாரும் தடுக்காதீர்கள்! 31